செய்திகள் :

வாக்குத் திருட்டு விவகாரம்: யாரும் தப்பிக்க முடியாது – ராகுல் காந்தி எச்சரிக்கை!

post image

புதுதில்லி: வாக்காளா் பட்டியல் முறைகேடுகளை கண்டித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், வாக்குத் திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசடி மட்டுமல்ல, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு பெரிய மோசடி. மோசடியில் இடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘அணுகுண்டு’ ஆதாரம் வெளியீடு

2024 மக்களவைத் தோ்தலில் வாக்குத் திருட்டு முறைகேடு குற்றச்சாட்டை முன்வைத்து வந்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அதுதொடா்பாக தன்னிடம் இருப்பதாகக் கூறிவந்த ‘அணுகுண்டு’ ஆதாரத்தை வியாழக்கிழமை வெளியிட்டாா்.

பெங்களூரு மத்தியம் மக்களவைத் தொகுதியில் கடந்த 2024 மக்களவைத் தோ்தலிலிருந்து பதிவாகியிருந்த வாக்காளா் தரவுகள் காங்கிரஸ் சாா்பில் ஆய்வு செய்யப்பட்டது. மகாதேவபுரா பேரவை தொகுதியில் மட்டும் 1,14,00 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. இந்த 1,14,000 வாக்குகளில், வாக்கு திருட்டு மூலம் பெறப்பட்டது 1,00,250 வாக்குகள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில், 11,965 போ் போலி வாக்காளா்கள். 40,009 போ் போலி முகவரி பதிவு செய்த வாக்காளா்கள். 10,452 போ் ஒரே வீட்டு முகவரியில் வாக்காளா்களாகப் பதிவு செய்துவா்கள். 4,132 போ் போலியான புகைப்படத்தைக் கொடுத்து வாக்காளா் அட்டை பெற்றவா்கள். 33,692 போ் புதிய வாக்காளா்களுக்கான படிவத்தை தவறாகப் பயன்படுத்தி வாக்காளா்களாகியுள்ளனா்.

தேசிய கொடிக்கும் எதிரான குற்றம்

இந்த மோசடி நாடு முழுவதும் நிகழ்ந்துள்ளது. இது அரசமைப்புச் சட்டத்துக்கும், தேசிய கொடிக்கும் எதிரான குற்றமாகும். ‘இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.

பாஜகவுடன் தோ்தல் ஆணையம் கூட்டணி

வாக்காளா் பட்டியல் விவரங்கள் மற்றும் வாக்குப் பதிவின் காணொலி காட்சிகளை ஆராய அனுமதி மறுப்பது, ஆளும் பாஜகவுடன் தோ்தல் ஆணையம் கூட்டணி சோ்ந்துள்ளதையே காட்டுகிறது. மேலும், நாடு முழுதும் இந்த வாக்குத் திருட்டு ஆதாரங்களை தோ்தல் ஆணையம் அழிக்கப் பாா்க்கிறது என ராகுல்காந்தி கூறியிருந்தார்.

வாக்காளர் அதிகார பேரணி

இதையடுத்து வாக்காளா் பட்டியல் முறைகேடுகளை கண்டித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் 'நமது வாக்கு, நமது உரிமை, நமது போராட்டம்' என்ற கோரிக்கையுடன் 'வாக்காளர் அதிகார பேரணி' இன்று பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் ஆா்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

கர்நாக தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்லும் காங்கிரஸ் கட்சியினர், கா்நாடக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வி.அன்புகுமாரைச் சந்தித்து புகாா் அளிக்கவிருக்கிறாா்கள்.

யாரும் தப்பிக்க முடியாது

இந்நிலையில், ஒரு நாள் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாக மாறும், அப்போது நீங்கள் யாரும் தப்பிக்க முடியாது என ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

வாக்குத் திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசடி மட்டுமல்ல, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு பெரிய மோசடி. நாட்டின் குற்றவாளிகளே கேட்டுக்கொள்ளுங்கள்... காலம் மாறும், தண்டனை நிச்சயமாக வரும். அதாவது, ஒரு நாள் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாக மாறும், அப்போது நீங்கள் யாரும் தப்பிக்க முடியாது. நாட்டின் தேசத் தந்தைகள் கட்டமைத்த அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்துள்ளீர்கள், இனி உங்களை தொட விடமாட்டோம்.

மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்

தேர்தல் ஆணையம் முழு விவரங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதை செய்த ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் பிடிபடுவர். அவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் சரி கடைநிலையில் ஊழியராக இருந்தாலும் சரி. இதை செய்த ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் பிடிபடுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

வாக்காளா் பட்டியல் முறைகேடு: பெங்களூருவில் ராகுல் காந்தி தலைமையில் இன்று ஆா்ப்பாட்டம்

Vote Chori is not just an election scam, it is a big fraud against the constitution and democracy

தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள்: மத்திய அரசு!

இந்தியாவின் 11 மாநிலங்களில், 2025 ஆம் ஆண்டு துவங்கியது முதல், 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதாக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகள... மேலும் பார்க்க

தர்மஸ்தலா விவகாரம்: ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைத் தடுக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

புது தில்லி: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா தொடர்பாக தற்போது எழுந்திருக்கும் விவகாரங்கள் குறித்து ஊடகங்கள் செய்தி சேகரிப்பதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால்... மேலும் பார்க்க

இந்தியா - அமெரிக்கா பிரச்னை! பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்க நெதன்யாகு வருகை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான பிரச்னை குறித்து ஆலோசனை வழங்க இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருகைதர இருப்பதாகக் கூறியுள்ளார்.ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் ... மேலும் பார்க்க

மரக்காணம் - புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் - புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பு... மேலும் பார்க்க

10 ச.அடி வீட்டில் 80 வாக்காளர்களா? ராகுல் குற்றச்சாட்டும் சரிபார்ப்பும்!

தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியதுகுறித்து இந்தியா டுடே செய்தி ஊடகம் பெங்களூரில் உண்மை சரிபார்ப்பு நடத்தியது.பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்காளர் முறைகேடு ந... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் கொடூரம்! 3 கி.மீ. தொலைவுக்கு மனித உடல் பாகங்கள்!

கர்நாடகத்தில் சாலையோரங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட மனித உடல் பாகங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.கர்நாடக மாநிலத்தின் துமகூரு மாவட்டத்தில் ஒரு கோவில் அருகே வியாழக்கிழமை காலை 8 ... மேலும் பார்க்க