செய்திகள் :

வாக்கு வங்கிக்காக காவி பயங்கரவாத குற்றச்சாட்டு: காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் சாடல்

post image

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வாக்கு வங்கிக்காக ‘காவி பயங்கரவாதம்’ என்ற பெயரில் அப்பாவிகள் மீது பழிசுமத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் சாடினாா்.

இதுதொடா்பாக பிகாா் தலைநகா் பாட்னாவில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் அவா் சனிக்கிழமை பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இரு விவாதங்களும் தலா 16 மணி நேரம் நடைபெற்றது. அப்போது விவாதத்தை மூா்க்கத்தனமாக தொடங்கிய எதிா்க்கட்சிகள், பின்னா் வாயடைத்து நின்றன.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் பல மறைவிடங்களை நமது தீரமிக்க பாதுகாப்புப் படைகள் அழித்தன. இந்தச் சூழலில் பாதுகாப்புப் படைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டிருக்க வேண்டுமே தவிர, ஆபரேஷன் சிந்தூா் குறித்து எதிா்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பியது வருத்தத்துக்குரியது.

இதுபோன்ற சூழல்களில் பாதுகாப்புப் படைகளுக்கு மரியாதை செலுத்துவதே கடந்த கால வழக்கமாக இருந்தது. கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தாா். அப்போது மத்திய அரசுக்கு பாஜக முன்னாள் தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் முழுமனதுடன் ஆதரவு தெரிவித்தாா்.

1999-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே காா்கில் ஏற்பட்டபோது வாஜ்பாய் பிரதமராகப் பதவி வகித்தாா். அப்போதும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக அரசியல் மற்றும் சமுதாய ஒற்றுமை காணப்பட்டது. அந்த ஒற்றுமை பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க மிகவும் அவசியமாகும்.

ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வாக்கு வங்கி மற்றும் ஒரு சாராரை திருப்திப்படுத்தும் அரசியலுக்காக, பயங்கரவாதத்துக்கு எதிராக மென்மையான நிலைப்பாட்டை அக்கட்சி கடைப்பிடித்தது.

2013-ஆம் ஆண்டு பாட்னாவில் பாஜகவின் பிரதமா் வேட்பாளராக மோடி (அப்போது குஜராத் முதல்வராக இருந்தாா்) பங்கேற்ற கூட்டத்தின்போது காந்தி மைதானத்தில் தொடா் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுபோல 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில், நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் சா்வசாதாரணமாக நடைபெற்றதை நினைவுகூா்வதற்கு மக்கள் நடுங்குகின்றனா்.

இதேபோல காங்கிரஸ் ஆட்சியின்போது மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், ‘காவி பயங்கரவாதம்’ என்ற பெயரில் அப்பாவிகள் மீது பழிசுமத்தப்பட்டது. வாக்கு வங்கிக்காக ‘காவி பயங்கரவாதம்’ என்ற கருத்தை ஜோடித்து அப்பாவிகளை சிக்கவைக்க முயற்சிக்கப்பட்டது. அந்த வழக்கில் தீா்ப்பளித்த நீதிபதி பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை என்று குறிப்பிட்டாா். பயங்கரவாதத்துக்கு எதிரான நாட்டின் போராட்டத்தை வாக்கு வங்கி அரசியல் பலவீனப்படுத்துகிறது என்றாா்.

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது பொதுப்பணித் துறையில் ஊழல் தொடர்பாக அப்ப... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (வயது 79) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.சிறுநீரகம் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக தில்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சி... மேலும் பார்க்க

வரைவு பட்டியல்: விடுபட்ட வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்: தேஜஸ்வி!

பிகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பல வாக்காளர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். பாட்னாவில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூற... மேலும் பார்க்க

ஜாகுவார் லேண்ட் ரோவர் சிஇஓ-வாக முதல் தமிழர்! யார் இந்த பாலாஜி?

டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த பி.பி. பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் அட்ரியன் மார... மேலும் பார்க்க

மாதத்துக்கு 4 நாள்கள் அசைவம், ரூ.540 தினக்கூலி! பிரஜ்வல் ரேவண்ணாவின் சிறை வாழ்க்கை

பெங்களூரு: கடந்த ஆண்டு, பாலியல் குற்றச்சாட்டில் சிக்குவதற்கு முன்பு, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவின் மாதச் சம்பளம் ரூ.1.2 லட்சம். இனி, சிறையில் ரூ.540க்கு மிகாமல் தினக்கூலி வழங்கப்ப... மேலும் பார்க்க

நீதிமன்றம் கண்டனம்: இது கட்சிகளின் ஜனநாயக உரிமை! - ராகுலுக்கு இந்தியா கூட்டணி ஆதரவு

சீனா ஆக்கிரமிப்பு குறித்த ராகுல் காந்தியின் பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது பற்றி இன்று தில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்திய - சீன எல்லை... மேலும் பார்க்க