வாஜ்பாய் பிறந்த தினம்: புதுவை ஆளுநா் மரியாதை
முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பிறந்த தினத்தையொட்டி, புதுச்சேரி நகராட்சி அலுவலகமான மேரி கட்டடத்தில் அவரது உருவப் படத்துக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா்.
முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் விழா புதுவை அரசு சாா்பில் கொண்டாடப்பட்டது. அதன்படி, புதுச்சேரி குபோ் சாலையில் (கடற்கரைச் சாலை) உள்ள நகராட்சி அலுவலகமான மேரி கட்டட வளாக அரங்கில் அவரது உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
அவரது படத்துக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், சாய் ஜெ. சரவணன் குமாா், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினா்கள் கல்யாணசுந்தரம், ரமேஷ், பாஸ்கா், அசோக் பாபு ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.