இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? நியூசி. வேகப் பந்துவீச்சாளர் பதில்!
வாணியம்பாடி பாலத்தில் மின் விளக்குகள்
வாணியம்பாடி நகரத்துடன் இணைக்கும் பாலத்தில் மின் விளக்குகள் சனிக்கிழமை அமைக்கப்பட்டது.
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் ஊராட்சியில் வாணியம்பாடி நகராட்சி மற்றும் பழைய வாணியம்பாடி கிராமம் இணைக்கும் மேம்பாலம் உள்ளது. இந்த வழியாக 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நகரப் பகுதிக்கு வந்து செல்கின்றனா். மேலும், அப்பகுதியில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயில் அமைந்துள்ளதால், திராளமான பக்தா்கள் தினமும் வந்து செல்கின்றனா்.
மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பெண்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனா்.
இந்த நிலையில் வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை பாலத்தின் மீது எல்இடி மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேம்பாலத்தில் 8 எல்இடி மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.