வாத்தி 2 இல்லை, லக்கி பாஸ்கர் 2 இருக்கு..! வெங்கி அட்லூரி பேட்டி!
இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் லக்கி பாஸ்கர் 2 படம் நிச்சயமாக எடுப்பேன் எனக் கூறியுள்ளார்.
நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளதரி, ராம்கி, சாய் குமார், ரித்விக் ஆகியோர் நடித்த லக்கி பாக்ஸர் திரைப்படம் கடந்தாண்டு தீபாவளி பண்டிகைகையொட்டி வெளியானது.
முழு தெலுங்கு படமான லக்கி பாஸ்கர் தமிழ், மலையாளம், ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. துல்கர் சல்மான் தமிழ், மலையாளம் மொழிகளில் டப்பிங் செய்திருந்தார்.
மும்பை பின்னணியில் உள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ.110 கோடி வசூலித்தது.
சூர்யா 46 படத்தை இயக்கிவரும் வெங்கி அட்லூரி நேர்காணல் ஒன்றில் பேசியதாவது:
சூர்யா 46 ஒரு நல்ல குடும்பப் படமாக இருக்கும். கஜினி சஞ்சய் ராமசாமி மாதிரி இருக்கும்.
சார் (வாத்தி) -2 படம் உருவாகாது. அது தனிக்கதையாக இருக்க வேண்டுமென தனுஷ் விரும்பினார்.
லக்கி பாஸ்கர் -2 நிச்சயமாக வரும். அதற்கான ஸ்கிரிப் இன்னும் தயாராகவில்லை. நானும் துலகர் சாரும் அவரவர் படங்களில் பிஸியாக இருக்கிறோம். நிச்சயமாக வரும். ஆனால், அதற்காக சிறிது நேரமெடுக்கும் என்றார்.
Venky Atluri has addressed rumours surrounding sequels to his recent films Sir and lucky bhaskar. In a recent interview, Atluri confirmed that while a second instalment of Lucky Baskhar is in development, Sir (also released in Tamil as Vaathi) will not have a follow-up.