கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்...
`வாரத்துக்கு 70 & 90 மணிநேர வேலை... பொருளாதார உயர்வா? அடிமைத்தனமா?' - விகடன் கருத்துக்கணிப்பு
உலகெங்கிலும் முதலாளிகளின் பெரும் வணிக லாபத்துக்காக, உற்பத்திக்கான கருவியாகச் சக்கையாகப் பிழியப்பட்டு, கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான தொழிலாளர்களுக்கு, நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின் 8 மணிநேர வேலை என்ற நிம்மதி பெருமூச்சு கிடைத்தது. ஆனால், இன்று தொழில்நுட்பம் எங்கேயே சென்றுகொண்டிருக்கின்ற காலத்தில், மீண்டும் தொழிலாளர்களை உற்பத்திக்கான கருவியாக மாற்றும் வேலைகளின் மறு உருவமாக, ஒருநாளைக்கு 12 மணிநேர வேலை, வாரத்துக்கு 70 மணிநேரம், 90 மணிநேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்று முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து சில குரல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
2023-ல் தமிழக தி.மு.க அரசுகூட, `வாரத்தில் நாள் ஒன்றுக்கு 12 மணிநேர வேலை, நான்கு நாள்கள் விடுமுறை' என்ற சட்ட திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டுவந்து பின்னர் எதிர்ப்புகளால் பின்வாங்கியது. சமீபத்தில், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி ``வாரத்துக்கு 70 மணிநேரம் வேலை பார்க்க வேண்டும்" என்றும், எல் அண்ட் டி தலைவர் சுப்பிரமணியம் ``வாரத்துக்கு 90 மணிநேரம் வேலை பார்க்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை கூட வேலை பார்க்க வேண்டும்." என்றும் கூறியிருந்தனர்.
இவர்களின் இத்தகைய கூற்று பெரும் விவாதத்தைக் கிளப்பவே, அதுபற்றி மக்களின் கருத்துக்களை அறிய விகடன் இணையதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், ``வாரத்துக்கு 70 & 90 மணிநேர வேலை என முறையே இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி மற்றும் எல் அண்ட் டி தலைவர் சுப்பிரமணியம் பேசியுள்ளது..." என்ற கேள்வி கொடுக்கப்பட்டு, ``பொருளாதாரத்தை உயர்த்தும், அடிமைத்தனத்தை உருவாக்கும், கருத்து இல்லை" என்ற மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவில் அதிகபட்சமாக, `86 சதவிகிதம் பேர் அடிமைத்தனத்தை உருவாக்கும்' என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக 10 சதவிகிதம் பொருளாதாரத்தை உயர்த்தும் என்றும், 4 சதவிகிதம் பேர் கருத்து இல்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.
பரந்தூர் விமான நிலையம் பிரச்னை தொடர்பாக, பரந்தூருக்கு நேரில் சென்ற த.வெ.க தலைவர் விஜய், ``அரிட்டாபட்டி நிலைப்பாட்டைத் தானே பரந்தூர் விவகாரத்திலும் எடுத்திருக்க வேண்டும்." என தி.மு.க அரசு நோக்கி கேள்வியெழுப்பியிருப்பது குறித்து விகடன் வலைதளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதில் கலந்துகொள்ள பின்வரும் லின்கை கிளிக் செய்யவும்... https://www.vikatan.com/
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...