செய்திகள் :

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

post image

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (செப்டம்பர் 12 - 18) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

அரசு சார்ந்த பணிகள் நிறைவேறும். வருமானம் படிப்படியாக உயரும். கடினமான செயல்களையும் செய்துமுடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய தரமான விதைகள் வாங்கி விவசாயத்தை மேம்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளின் செயல்திறன் கூடும். கலைத்துறையினர் ரசிகர்களின் ஒத்துழைப்பை அபரிமிதமாகப் பெறுவீர்கள். பெண்மணிகள் மனதிற்கினிய பயணத்தை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் புதிய பொருள்களை உற்பத்தி செய்யத் தொடங்குவீர்கள். தர்மகாரியங்களில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் சீரான லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு கறுப்பு நிறப் பயிர்களால் வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பொதுநலப்பணிகளில் தங்களைஅர்ப்பணித்துக்கொள்வீர்கள். கலைத்துறையினர் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

பெண்மணிகள் ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தெளிவாகச் சிந்தித்துக் காரியமாற்றுவீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடமை உணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் நல்ல மகசூல் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்துவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். பெண்மணிகள் கணவருடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வெளியூர்ப் பயணங்களில் எதிர்பார்த்த நன்மைகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வருமான உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் உயர்வைக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் கடினமாக உழைப்பீர்கள். கலைத்துறையினர் மனதிற்கினிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் நிறைவான போக்கைக் காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறக் காணலாம்.

சந்திராஷ்டமம் - இல்லை

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்கள் பிரச்னைகள் தீரும். கோர்ட் விவகாரங்களில் எதிர்பார்த்த திருப்பங்கள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பீர்கள். வியாபாரிகளின் கடையை நோக்கி வாடிக்கையாளர்கள் வருவார்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் வேலைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்மணிகள் தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மழலைப்பாக்கியம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடமிருந்து விலகி தனித்துச் செயல்படுவீர்கள். வியாபாரிகள் நல்ல முறையில் வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகள் உபரித் தொழிலாக பால் வியாபாரம் செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்திடம் சுமுக உறவை வைத்துக்கொள்வீர்கள். கலைத்துறையினரின் பணவரவுக்குக் குறைவு வராது. பெண்மணிகளுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - 12

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் வளர்ச்சியால் பெருமிதம் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும். வியாபாரிகள் தேவைக்கேற்ப சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் லாபத்தைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் பிறருக்கு ஆலோசனைகள் வழங்கவேண்டாம். கலைத்துறையினருக்கு சமூகத்தில் வரவேற்புகள் அதிகரிக்கும். பெண்மணிகளுக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும்.

மாணவர்கள் நண்பர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.

சந்திராஷ்டமம் - 13, 14

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சமூகத்தில் உங்கள் மதிப்பு, கெüரவம் கூடும். பெற்றோர்களின் ஆரோக்யம் சீராக இருக்கும். பிரபலங்களிடம் உங்கள் மதிப்பு கூடும்.

உத்யோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைப்பீர்கள். வியாபாரிகள் பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். விவசாயிகள் சக விவசாயிகளுக்கு உதவி செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் தனித்திறமையைக் கூட்டிக்கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு உடன் பிறந்தோர் ஆதரவாக இருப்பர்.

மாணவர்கள் எதிலும் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - 15, 16

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சவாலான செயல்களை சுலபமாகச் செய்துமுடிப்பீர்கள். வருமானத்தை விரயம் செய்யாமல் சேமிக்கத்தொடங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். வியாபாரிகள் சிறிய முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் தேடிவரும்.

அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினர் புதிய யுத்திகளைக் கற்றுக்கொள்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தினரின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - 17, 18

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் புதிய யுத்திகளைப் புகுத்துவீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் புதிய கூட்டாளிகளைச் சேர்த்துக்கொள்வீர்கள். விவசாயிகள் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் புதிய கலை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பெண்மணிகள் குடும்பப் பொறுப்புகளை ஏற்று நற்பெயரெடுப்பீர்கள். மாணவர்கள் சுமுகமாகப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலில் உற்பத்திச் செலவு குறையும். வருமானமும் இரட்டிப்பாகும். பெரியோரின் ஆசிகளைத் தேடிப்பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்டுப் பணியாற்றி வெற்றிபெறுவீர்கள். வியாபாரிகள் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். விவசாயிகள் சக விவசாயிகளிடம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினரின் ஆற்றல் பெருகும். பெண்மணிகள் தெய்வக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் ஆரோக்கியத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வீட்டிலும் வெளியிலும் உங்கள் அந்தஸ்து உயரும். தொழிலில் புதிய மாற்றங்களைக்கொண்டு வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மகிழ்ச்சியான செய்தியைக் கேட்பீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் சீரான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் மாற்றுப்பயிர்களைப் பயிரிட்டு லாபமடைவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிமேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினர் கலைப்பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்மணிகள் குழந்தைகளையும் ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

சிம்பு 51: படப்பிடிப்பு தாமதம் ஏன்? இயக்குநர் விளக்கம்!

நடிகர் சிம்புவின் 51-ஆவது படம் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பதற்கான காரணத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார். அவர் பேசியதில் தாமதத்திற்குக் காரணம் சிம்பு எனப் பலரும் சமூக வலைதளங்களில் கூறுவதை... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் இருந்து விலகிய அனுஷ்கா!

நடிகை அனுஷ்கா தற்காலிகமாக சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவரது நடிப்பில் காட்டி திரைப்படம் கடந்த செப்.5ஆம் தேதி வெளியானது. கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி சூப்பர் என்ற... மேலும் பார்க்க

ஷ்ருதி ஹாசன் வெளியிட்ட கும்கி 2 முதல் பார்வை போஸ்டர்!

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியுள்ள கும்கி 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. பென் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள கும்கி 2 விரைவில் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பிரபு சாலமன் இ... மேலும் பார்க்க

மீண்டும் தேசிய விருது கிடைக்குமா? நித்யா மெனனின் இட்லி கடை போஸ்டர்!

இட்லி கடை படத்தில் நடிகை நித்யா கதாபாத்திர போஸ்டர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் படம் அக்.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நடிகர் தனுஷ் எழுதி இயக்கியுள்ள இட்லி கடை படத்தின் ... மேலும் பார்க்க

அடுத்தடுத்து சஸ்பென்ஸ்... ஆனால்! ஜி.வி. பிரகாஷின் ப்ளாக்மெயில் - திரை விமர்சனம்!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான ப்ளாக்மெயில் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.படத்தின் ஆரம்பத்திலேயே நடிகர்கள் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி தம்பதியின் குழந்தை காணாமல் போகிறது. இன்னொரு புறம... மேலும் பார்க்க

கும்கி - 2 படத்தின் அறிவிப்பு வெளியானது!

கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்ப... மேலும் பார்க்க