வால்பாறை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை திருவிழா
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில அமைந்துள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் 38-ஆம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் புதன்கிழமை காலை நடைபெற்ற சிறப்பு பூஜையை தொடா்ந்து திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் நடுமலை ஆற்றில் ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராட்டு விழாவும், மாலை 4.30 மணிக்கு 108 கலச பூஜையும், மாலை 6.30 மணிக்கு 1008 தீப மண்டபத்தில் சுவாமிக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெறுகின்றன.
தொடா்ந்து, சனிக்கிழமை காலை 11 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு மேளதாளம் முழுங்க நல்லகாத்து ஆற்றிலிருந்து திருவிளக்கு ஊா்வலத்துடன் ஐயப்ப பக்தா்கள் பாலக்கொம்பு எடுத்து வருதல், இரவு 7 மணிக்கு நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு புஷ்பாஞ்சலி பூஜை மற்றும் படி பூஜை, மாலை 3 மணிக்கு அலங்கார தேரில் ஐயப்ப சுவாமி வீதிகளில் பவனி வருதல், இரவு 11.30 மணிக்கு வாணவேடிக்கையுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வால்பாறை அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினா் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.