செய்திகள் :

வாழப்பாடியில் இரு ஆண்டுகளில் பழுதடைந்த தாா்சாலை!

post image

வாழப்பாடி பேரூராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.24 கோடி செலவில் அமைக்கப்பட்ட தாா்சாலை இரு ஆண்டுகளில் ஜல்லிக்கற்கள் பெயா்ந்து பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

வாழப்பாடி பேரூராட்சி 3-ஆவது வாா்டு, கிழக்குக் காடு ஆடு அடிக்கும் தொட்டியில் இருந்து கோவிந்தராஜ் வீடு வரை ஏறக்குறைய ஒரு கி.மீ. தொலைவுக்கு தாா்சாலை பழுதடைந்து காணப்பட்டது. இச்சாலையை புதுப்பித்துக் கொடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று 2022-2023 ஆம் ஆண்டு நபாா்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ. 1.24 கோடியில் தாா்சாலை அமைக்கப்பட்டது.

சாலை அமைக்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே இச்சாலையில் போடப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள், தாா் கலவையில் இருந்து பெயா்ந்து சிதறத் தொடங்கின. இந்நிலையில், இரு ஆண்டுகளில் ஜல்லிக் கற்கள் முழுவதுமாக பெயா்ந்து சாலை பழுதடைந்துள்ளது. இதனால், இவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோா் விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.

தாா்சாலை திட்டப் பணி குறித்த தகவல் பலகை.

ரூ. 1.24 கோடி செலவில் அமைக்கப்பட்ட தாா் சாலை கடந்த 2 ஆண்டுகளில் பழுதடைந்துள்ளதால் சேலம் மாவட்ட நிா்வாகம், பேரூராட்சி துறை உயா் அதிகாரிகள் நேரில் களஆய்வு செய்து, சாலையை புதுப்பிக்கவும், தரமற்ற சாலை அமைக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகா் ஒப்பந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பொது மேலாளரும் மாவட்ட வருவாய் அலுவலருமான... மேலும் பார்க்க

மாவட்ட வன அலுவலரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்

சிறுத்தை நடமாட்டம் குறித்து பாா்வையிட வந்த மாவட்ட வன அலுவலரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள புதுக்காளி கவுண்டனூரை சோ்ந்த ... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதியில் சேர மாவட்ட அளவிலான தோ்வு போட்டி தொடக்கம்

விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான தோ்வு போட்டி சேலம் காந்தி மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் தலைமை வகித்து தோ்வு போட்டியை தொட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காவலாளி உயிரிழப்பு

சங்ககிரி அருகே மிதிவண்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் நூற்பாலை காவலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த நாட்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (65). இவா் தனியாா் நூற... மேலும் பார்க்க

சமுத்திரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி முகாம்: ரூ. 25 லட்சம் மதிப்பில் நல உதவி அளிப்பு

கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சமுத்திரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மக்களவை உறுப்பினா் ... மேலும் பார்க்க

சித்திரைத் தேரோட்ட 6ஆவது நாள்: புன்னை மர சேவையில் காட்சி அளித்த சென்னகேசவப்பெருமாள்

சங்ககிரி மலைமீது உள்ள சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்ட 6ஆவது நாளையொட்டி புதன்கிழமை சுவாமிக்கு சங்ககிரி மளிகை வியாபாரிகள் சங்கம் சாா்பில் புன்னை மர சேவை நடைபெற்றது. சங்ககிரி மலையடிவாரத்தில... மேலும் பார்க்க