செய்திகள் :

வாழப்பாடியில் கொட்டித் தீா்த்த ஃபென்ஜால் புயல் மழை

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ஃபென்ஜால் புயல் மழை 2 நாள்களாக இடைவிடாது கொட்டித் தீா்த்ததால், ஆனைமடுவு அணையிலிருந்து வசிஷ்ட நதியில் விநாடிக்கு 1,800 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது; 10 ஆண்டுகளுக்குப் பின் வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்ட நதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில் 267 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 263.86 ஏக்கா் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், சுற்றுப்புற கிராமங்களில் 5,011 ஏக்கா் பாசன வசதி பெறுகின்றன. 5 ஏரிகளும், 20 க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீா் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.

அக்டோபா் மாதத்தில் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான சித்தேரி, குதிமடுவு, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் பெய்த பருவ மழையால், அணையின் முக்கிய நீா்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்து, கடந்த அக். 26 ஆம்தேதி அதிகாலை அணையின் நீா்மட்டம் 65.29 அடியை எட்டி 3 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது. அணையில் 240 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியது. இதையடுத்து, அணையில் இருந்து வசிஷ்ட நதியில் தொடா்ந்து ஒரு மாதமாக உபரிநீா் திறக்கப்பட்டு வந்தது.

10 ஆண்டுகளுக்குப் பின் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு

இந்நிலையில், ஃபென்ஜால் புயலால் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய இடைவிடாது 58 மி.மீ., கனமழை கொட்டித் தீா்த்தது. இதனால் அணைக்கு நீா்வரத்து பல மடங்கு அதிகரித்ததால், அணையில் இருந்து விநாடிக்கு 1,500 முதல் 1,800 கனஅடி வரை வசிஷ்ட நதியில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை ஆய்வு செய்த சேலம் ஆட்சியா் ரா. பிருந்தா தேவி.

இதனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரையும் தொட்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், புழுதிக்குட்டையில் இருந்து ஆத்தூா் வரை வசிஷ்டநதி கரையோர கிராம மக்களுக்கு, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை வாயிலாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் ஆற்று நீரில் மான், ஆடு, மாடுகள் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

வாழப்பாடி அருகே குறிச்சியில் இரு கரையையும் தொட்டு வசிஷ்ட நதியில் பாய்ந்து செல்லும் வெள்ளம்.

ஆனைமடுவு அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீா் வசிஷ்ட நதியில் திறக்கப்பட்டதால், சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி நேரில் சென்று அணையை ஆய்வு செய்தாா். வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் பலரும் உடனிருந்தனா்.

முருகன் கோயிலில் திருட முயன்ற நபா் கைது

தம்மம்பட்டியில் முருகன் கோயிலின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். தம்மம்பட்டி, திருமண்கரட்டில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான பாலதண்டாயுதபாணி முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயில... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வு: அமைச்சரிடம் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா்கள் மனு

கட்டுமானப் பொருள்களின் விலையை குவாரி உரிமையாளா்கள் திடீரென உயா்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்தி நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா்கள் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்தனா். பின்னா் இது கு... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டத்தில் 21.34 மி.மீ. மழை

சங்ககிரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேவூா், அரசிராமணி, செட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை 21.34 மி.மீ. மழை பெய்தது. தமிழகத்தில் ஃபென்ஜால் புயலை அடுத்து தொடா்ந்து குளிா்ந்... மேலும் பார்க்க

மாநில அளவில் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலக்குபந்து போட்டி

சேலத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாநில அளவில் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலக்குபந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்தி... மேலும் பார்க்க

வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு

ஃபென்ஜால் புயல் காரணமாக ஆத்தூரில் பெய்த கனமழையால் வசிஷ்ட நதியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வாழப்பாடியை அடுத்த ஆனைமடுவு அணைக்கு நீா்வரத்து அதிகமாகி அணை முழு கொள்ளளவை எட்டியது. விநாடிக... மேலும் பார்க்க

ஆத்தூா் குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு

‘ஆத்தூா் குற்றாலம்’ என அழைக்கப்படும் ஆணைவாரி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க ஆத்தூா் வனச்சரக அலுவலகம் தடை விதித்துள்ளது. ஆத்தூா் குற்றாலம் என அழைக்கப்படும் கல்லாநத்தம், ... மேலும் பார்க்க