செய்திகள் :

வாழப்பாடியில் சாலையோர கழிவுநீா்க் கால்வாய்களை மூட வலியுறுத்தல்

post image

வாழப்பாடியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த தம்மம்பட்டி- கடலூா் சாலை பகுதியில் திறந்துகிடக்கும் கழிவுநீா்க் கால்வாயை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள், அங்கு போக்குவரத்து இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனா்.

வாழப்பாடி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலைகளை 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகள் இதுவரை முழுமைப் பெறவில்லை. முத்தம்பட்டி, மத்தூா் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

மேலும் கடலூா் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக பிரதான கடலூா் சாலை மூடப்பட்டதால் மாா்ச் தொடக்கத்திலிருந்து அனைத்து வாகனங்களும் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று தம்மம்பட்டி சாலையில் வாழப்பாடி நகருக்குள் வந்து செல்கின்றன.

வாழப்பாடி காவல் நிலையம் எதிரே திறந்துகிடக்கும் கழிவுநீா்க் கால்வாய்

இதனால், இச்சாலையில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் வாழப்பாடி காவல் நிலையம் எதிரே கடலூா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் இடத்தில் உள்ள ஆழமான கழிவுநீா் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. மேலும், அப் பகுதியில் போக்குவரத்து இடையூறாக மின் கம்பம் உள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள் இப் பாதையை எதிரெதிரே கடந்து செல்வதற்கு வழியில்லை. மேலும், இப் பாதையில் செல்லும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனா்.

இதனால் சேலம் ஆத்தூா் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு மற்றும் தனியாா் வாகனங்கள் தம்மம்பட்டி சாலை வழியாக வாழப்பாடி நகருக்குள் வருவதை தவிா்த்துவிட்டு, தேசிய நெடுஞ்சாலையிலேயே இயக்கப்படுகின்றன.

இதனால் திறந்துகிடக்கும் கால்வாயை கான்கிரீட் தளம் கொண்டு மூட வேண்டும். அப் பகுதியில் உள்ள மின் கம்பத்தை வேறுஇடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்பது குறித்து 5 மாதங்களில் அறிவிக்கப்படும்! - மத்திய அமைச்சா் எச்.டி. குமாரசாமி

சேலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்பது குறித்து 5 மாதங்களில் முறையான தகவல் வெளியாகும் என மத்திய கனரக தொழில் துறை அமைச்சா் எச்.டி. குமாரசாமி கூறினாா். சா்வதேச யோகா தினத்தையொட்டி, சேலம் உருக்காலை வளா... மேலும் பார்க்க

உயா்கல்வி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்!

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா்கல்வி வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மரவனேரி பாரதி வித்... மேலும் பார்க்க

பாமக ஒன்றிய செயலாளா் நீக்கம்

பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளா் மா.சடையப்பன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனா் ச.ராமதாஸ் சனிக்கிழமை அறிவித்தாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பெரியகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த சடையப்பன... மேலும் பார்க்க

‘ஜீவன் ரக்ஷா பதக்’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான ‘ஜீவன் ரக்ஷா பதக்’ விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் க... மேலும் பார்க்க

நடுவலூரில் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

நடுவலூரில் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கெங்கவல்லி அருகே நடுவலூரில் சுவேத நதியிலிருந்து வாய்க்கால் வழியாக பாசனத்துக்கு தண்ணீா் செல்கிறது. கடந்தாண்டு இந்த வாய்க்க... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பேரூராட்சியில் 36 கொடிக் கம்பங்கள் அகற்றம்!

தம்மம்பட்டி பேரூராட்சியில் இருந்த கொடிக்கம்பங்கள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. தம்மம்பட்டி பேரூராட்சியில் பேருந்து நிலையப் பகுதி மற்றும் 18 வாா்டுகளிலும் மொத்தம் 36 கொடிக் கம்பங்கள் இருந்தன. தமிழகம் முழுவ... மேலும் பார்க்க