செய்திகள் :

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: மாணவர் உள்பட இருவர் பலி!

post image

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சனிக்கிழமை இரவு இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், அரசுப் பள்ளி மாணவர் உள்பட இருவர் பலியாகினர்.

வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேஷ் என்பவரின் மகன் ஜீவா (17). இவர் வெள்ளாளகுண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் வேப்பிலைப்பட்டியில் மளிகைக் கடையில் பொருள்கள் வாங்கிக் கொண்டு, மங்களபுரம் சாலையில் பைக்கில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வேப்பிலைப்பட்டி பால் சொசைட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, இருட்டில் எதிர்பாராத விதமாக சேலத்தைச் சேர்ந்த இளைஞர் சூர்யா (25) என்பவர் ஓட்டி வந்த மற்றொரு பைக் மீது, மாணவன் ஜீவா ஓட்டிச் சென்ற பைக், நேருக்கு நேர் பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜீவா, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக பலியானார். மற்றொரு பைக்கை ஓட்டிச் சென்ற சூர்யா (25). இவரது பைக்கில் அமர்ந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த கிரில் பட்டறை தொழிலாளி விஜயராஜன் (59) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயராஜன், நள்ளிரவில் பலியானார்.

பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞர் சூர்யா சேலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

Two people, including a government school student, were killed in a head-on collision between two bikes near Vazhapadi in Salem district on Saturday night.

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ், நெல்லை... மேலும் பார்க்க

புலம்பெயர் தொழிலாளர்கள்: தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

தமிழக வாக்காளர் பட்டியலில் சுமார் 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களைச் சேர்த்து தேர்தல் முறைகளை தேர்தல் ஆணையம் மாற்ற முயற்சிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். தமிழக வாக்காளர்... மேலும் பார்க்க

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் நாளை(ஆக. 4) முழுக் கொள்ளளவை எட்டும் என்பதால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நீர்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி வெளியிட... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர... மேலும் பார்க்க

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மக்கள் புனித நீராட குவிந்தனர்.சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அணையின் மட்டம் பகுதியில் மக்கள்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு தீர்த்தவாரி: கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய நடராஜர்!

சிதம்பரம்: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி அண்ணையை வழிபடும் வகையில் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள், சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்... மேலும் பார்க்க