செய்திகள் :

வாழப்பாடி: குடும்பத் தகராறால் ஆற்றில் குதித்த கணவர் உயிருடன் மீட்பு; கர்ப்பிணி மனைவி மாயம்!

post image

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில் குடும்பத் தகராறில் மனமுடைந்து வசிஷ்ட நதியில் குதித்த தனியார் வாகன ஓட்டுநர் உயிரோடு மீட்கப்பட்டார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இவரது மனைவியான கர்ப்பிணிப் பெண்ணை இரு நாள்களாக வாழப்பாடி தீயணைப் படையினர் தேடி வருகின்றனர்.

வாழப்பாடி அடுத்த பேளூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் தனியார் வாகன ஓட்டுநர் ராமு(27). இவரது மனைவி மோகனாம்பாள் (19). இருவருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமடைந்த மோகனாம்பாள், பேளூர் அருகே வேட்டைக்காரனூர் பாலத்தில் இருந்து வசிஷ்டநதி பெரு வெள்ளத்தில் குதித்துள்ளார்.

இதையும் படிக்க : கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை!! ஊத்தங்கரையில் 503 மி.மீ. பதிவு!

இவரை தொடர்ந்து, இவரது கணவர் ராமுவும் வஷிஷ்டநதியில் குதித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த இப்பகுதி மக்கள், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரத்தில், ஆற்றுக்குள் செல்போன் டவரை பிடித்துக் கொண்டு தத்தளித்தபடி உயிருக்கு போராடிய ராமுவை உயிருடன் மீட்டனர்.

ஆற்றில் குதித்த இளம்பெண் மோகனாம்பாள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து தெரியவந்ததால், இது குறித்து வாழப்பாடி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு படை அலுவலர் பெரியசாமி தலைமையிலான மீட்பு படையினர், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 6 மாத கர்ப்பிணியான இளம்பெண் மோகனாம்பாளை, இரண்டாவது நாளாக தீவிரமாக தேடி வருகின்றனர்.

குடும்பத் தகராறில் மனமுடைந்த தம்பதி, வசிஷ்டநதியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம், இவரது உறவினர்கள் மற்றும் இப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 7,414 கனஅடியாக திங்கள்கிழமை காலை அதிகரித்துள்ளது.காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ... மேலும் பார்க்க

முருகன் கோயிலில் திருட முயன்ற நபா் கைது

தம்மம்பட்டியில் முருகன் கோயிலின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். தம்மம்பட்டி, திருமண்கரட்டில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான பாலதண்டாயுதபாணி முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயில... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வு: அமைச்சரிடம் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா்கள் மனு

கட்டுமானப் பொருள்களின் விலையை குவாரி உரிமையாளா்கள் திடீரென உயா்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்தி நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா்கள் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்தனா். பின்னா் இது கு... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டத்தில் 21.34 மி.மீ. மழை

சங்ககிரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேவூா், அரசிராமணி, செட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை 21.34 மி.மீ. மழை பெய்தது. தமிழகத்தில் ஃபென்ஜால் புயலை அடுத்து தொடா்ந்து குளிா்ந்... மேலும் பார்க்க

மாநில அளவில் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலக்குபந்து போட்டி

சேலத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாநில அளவில் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலக்குபந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்தி... மேலும் பார்க்க

வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு

ஃபென்ஜால் புயல் காரணமாக ஆத்தூரில் பெய்த கனமழையால் வசிஷ்ட நதியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வாழப்பாடியை அடுத்த ஆனைமடுவு அணைக்கு நீா்வரத்து அதிகமாகி அணை முழு கொள்ளளவை எட்டியது. விநாடிக... மேலும் பார்க்க