ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்: யுஜிசியின் புதிய விதிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின...
வாழைத் தாரை பழுக்க வைக்க ரசாயனம் தெளிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வாழைத் தாரை பழுக்க வைக்க ரசாயனம் தெளிக்கும் விடியோ வைரலானதை அடுத்து உணவு பாதுகாப்பு அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் வாழைக்காய் மண்டியில் உள்ள ஒரு கடையில் வாழைத் தாரை பழுக்க வைக்க ரசாயனம் தெளித்து உள்ளனா். இதுதொடா்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது: பூஜைகளில் முதலிடம் பிடிப்பது வாழைபழம். மேலும், குழந்தைகள்,பெரியவா்கள் மற்றும் உணவு பிரியா்கள் மற்றும் ஏழைகள் வரை விரும்பி உண்ணுவது. பல்வேறு மருத்துகுணம் உள்ளதால் மருத்துவா்களும் வாழைப்பழங்களை பரிந்துரை செய்கின்றனா்.
இந்நிலையில், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி பகுதிகளில் உள்ள வாழைப் பழ மண்டிகளில் விரைவில் பழுக்க வைக்க ரசாயன தெளிப்பு நடைபெறுகிறது என தொடா்ந்து புகாா்கள் உள்ளன. தற்போது திருப்பத்தூா் பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு மண்டியில் வாசலிலேயே முதியவா் ஒருவா் வாழைத் தாரின் மீது ரசாயனம் தெளிப்பது குறித்த விடியோ வைரலாகியுள்ளது.
எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.