செய்திகள் :

விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு உயர்தனிச் செம்மல் விருது; வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை கவுரவிப்பு

post image

அமெரிக்காவின் வடகரோலினாவில் உள்ள ராலேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் உயர்கல்வி வளர்ச்சிக்காக ஆற்றி வரும் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை சார்பில் “உயர்தனிச் செம்மல் விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

அமெரிக்காவில் வட கரோலினாவில் உள்ள ராலேவில் வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North Americans- FeTna) செயல்பட்டு வருகிறது.

விஐடி
விஐடி

தமிழர் மேம்பாட்டை முக்கிய அம்சமாகக் கொண்டு வட அமெரிக்காவில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் சங்கங்களை ஒருங்கிணைத்து கடந்த 38 ஆண்டுகளாக தமிழ் மொழி, பண்பாடு, மரபு, கலை, இலக்கியம், தொழில் வளர்ச்சிக்கு வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை சேவை செய்து வருகிறது. உலகத் தமிழர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் வகையில் வருடாந்திர மாநாடும் நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சர்வதேச அளவில் உயர்கல்வியில் சிறப்பான சேவை புரிந்து வரும் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு, வட கரோலினாவில் உள்ள ராலேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை “உயர்தனிச் செம்மல் விருது” வழங்கி கவுரவித்துள்ளது.

விஐடி வேந்தர்
விஐடி வேந்தர்

விருது வழங்கும் விழாவில் விஐடி துணைத் தலைவர் முனைவர். ஜி.வி.செல்வம், பன்னாட்டு உறவுகளுக்கான இயக்குநர் முனைவர். ஆர்.சீனிவாசன் மற்றும் வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

``JEE -ல் 75 -வது ரேங்க்; மும்பை ஐஐடியில் இடம், ஏரோநாட்டிக்கல் கனவு..'' - பட்டாசு தொழிலாளியின் மகள்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், படந்தால் அரசு பள்ளியில் பயின்ற யோகேஸ்வரி. அவரது தாய் பட்டாசு ஆலை தொழிலாளி, தந்தை டீக்கடை தொழிலாளி. அவர்களின் மூன்றாவது பிள்ளையான யோகேஸ்வரி 125 செ.மீ மட்டுமே உயரம் கொண்ட ... மேலும் பார்க்க

Yoga Day: வேளாளர் மகளிர் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி; நூற்றுக்கணக்கான மாணவிகள் பங்கேற்பு |Photo Album

யோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயி... மேலும் பார்க்க

``ஊதியம் வழங்க முடியவில்லை என்றால்.. அரசின் பங்கு என்ன?'' - மதுரை காமராசர் பல்கலை., ஊழியர்கள்

பல்வேறு புகார்கள், சர்ச்சைகளால் கல்வி தரத்தையும், மதிப்பையும் இழந்துவரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சமீபகாலமாக ஓய்வுவூதியர்களுக்கும் தற்போது பணிபுரிபவர்களுக்கும் ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாக... மேலும் பார்க்க

உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டும் விருதுநகர்; அனுபவம் பகிரும் ஆட்சியர்!

இந்த ஆண்டு தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் IIT, NIT, IIIT, CLAT, AIIMS நர்சிங்‌ என நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்குரிய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்... மேலும் பார்க்க