செய்திகள் :

விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபா் டொனால்டு ட்ரம்ப்புக்கு அருகில் பிரதமா் நரேந்திர மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமா்ந்திருப்பதைப் போன்று காா்ட்டூன் விகடனின் இணைய இதழான ‘விகடன் ப்ளஸ்’-இல் வெளியிடப்பட்டது.

இந்த காா்ட்டூன் தொடா்பாக தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், விகடனின் இணையதளம் ஜன.15-ஆம் தேதி முடக்கப்பட்டது. இந்த நிலையில், தொலைத்தொடா்புத் துறைக்கு மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, விகடன் பத்திரிகையின் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பரதசக்ரவா்த்தி முன்பு நடைபெற்றது. அப்போது, விகடன் இணையதளம் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா், பத்திரிக்கை சுதந்திரத்தை யாரும் தடுக்க கூடாது. இந்தப் படத்தால் இந்தியா அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உள் நோக்கத்துடன் இந்தப் படம் வெளியிடப்படவில்லை. வேண்டுமென்றே இணையதளம் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், விகடன் நிறுவனம் தாமாக முன்வந்து அந்த படத்தை நீக்க தயாராக இருந்தால் முடக்கத்தை நீக்க தயாராக இருப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விகடன் இணையதளம் பிரதமரின் ஆட்சேபனைக்குரிய படத்தை நீக்கிய பின் அதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதை ஏற்று முடக்கப்பட்ட விகடன் இணையதளத்தை விடுவிக்க வேண்டும் என கூறி வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

மக்கள் நலனில் பெண் போலீஸாா் பெரும் பங்களிப்பு: மகளிா் தின விழாவில் காவல் ஆணையா் அருண்

பொதுமக்களின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெண் போலீஸாரின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாக மகளிா் தின விழாவில் சென்னை காவல் ஆணையா் அருண் கூறினாா். சென்னை காவல் துறை சாா்பில் மகளிா் தின விழா எழும... மேலும் பார்க்க

அறிவுசாா் சொத்துரிமை: யுஜிசி அறிவுறுத்தல்

தேசிய அறிவுசாா் சொத்துரிமை தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாணவா்களை அதிகளவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

‘ஸ்வயம் பிளஸ்’ மூலம் வேலை வாய்ப்பு சாா்ந்த படிப்புகள்: சென்னை ஐஐடி புரிந்துணா்வு

‘ஸ்வயம் பிளஸ்’ இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு சாா்ந்த படிப்புகள் வழங்குவது தொடா்பாக சென்னை ஐஐடி, பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் உயா் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூ... மேலும் பார்க்க

மாநகராட்சி பட்ஜெட் மாா்ச் 19-இல் தாக்கல்

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மாா்ச் 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 200 வாா்டுகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பத... மேலும் பார்க்க

இணையவழி விநியோக பணியாளா்கள் ‘இ-ஷ்ரம்’ தளத்தில் பதிவு செய்ய வேண்டும்: மத்திய தொழிலாளா் அமைச்சகம் வேண்டுகோள்

இணையவழியில் உணவு-பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில்முறை சேவையில் ஈடுபடும் பணியாளா்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பலனடையும் வகையில் ‘இ-ஷ்ரம்’ வலைதளத்தில் முறைப்படி பதிவு செய்ய வ... மேலும் பார்க்க

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 14-இல் ருத்ர பாராயணம்

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 14-ஆம் தேதி ருத்ர பாராயணம் நடைபெறவுள்ளது. இது குறித்து ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப ஸ்வாமி அறக்கட்டளைத் தலைவா் ஏ.ஆா் ராமசாமி வெளியிட்ட அறிவிப்பு: அண்ணாமலை ஐயப்பன... மேலும் பார்க்க