செய்திகள் :

விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்!

post image

நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படத்தின் எழுத்துப் பணிகள் முடிவடையாததால் படப்பிடிப்பு தள்ளிச் சென்றபடியே இருக்கிறது.

இந்த நிலையில், விக்ரம் இயக்குநர் பிரேம் குமார் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேல்ஸ் இண்டர்னேஷல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

96, மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து 96 - 2 படத்தை இயக்க பிரேம் குமார் திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அப்படம் தள்ளிப்போக, திரில்லர் கதையொன்றை எழுதினார். விக்ரம் இக்கதையில்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ருக்மணி, சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இசைவெளியீட்டு விழாவில் ரஜினி இதைக் குறிப்பிடுவார்: லோகேஷ் கனகராஜ்

actor rukmini vasanth do female lead in vikram movie directed by prem kumar

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயில் வரை மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு காரிலிருந்து நின்றபடி கையசைத்தவாறு சென்ற பிரதமர் மோடி.காரில் நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வரும் பிரதமர் மோடி.பல... மேலும் பார்க்க

தியாகராஜ பாகவதராக துல்கர் சல்மான்! ஆர்வமூட்டும் டீசர் முன்னோட்டம்!

காந்தா திரைப்படத்தின் டீசர் அறிவிப்புக்கான முன்னோட்ட விடியோ ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் காந்தா திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வ... மேலும் பார்க்க

சிம்பு, வெற்றி மாறன் படத்தின் அப்டேட்!

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிற... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட மெஸ்ஸி..! டிராவில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்!

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் மெஸ்ஸி இல்லாமல் விளையாடிய இன்டர் மியாமி அணியின் ஆட்டம் சமனில் முடிந்தது.அமெரிக்காவின் சேஸ் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணியும் சின்சினாட்... மேலும் பார்க்க

ஓம் சிவோஹம்... இளையராஜாவின் இசைக்கு பிரதமர் மோடி எழுந்து நின்று பாராட்டு!

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செய்தார். அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் இன்று நடைபெறும் முதலாம் ... மேலும் பார்க்க