செய்திகள் :

விசிக, கம்யூனிஸ்டுகளைத் தொடர்ந்து காங்கிரஸ்... மதுரையில் கலெக்டருக்கு எதிராக குற்றச்சாட்டு ஏன்?

post image

மதுரை கலெக்டர் தங்களை அவமதித்து விட்டதாக விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் குற்றச்சாட்டியுள்ளது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் போராட்டம்

திருமாவளவன் கலந்துகொண்ட கட்சி கொடியேற்றும் ஒவ்வொரு நிகழ்ச்சியின்போது போலீஸை வைத்து அதை தடுத்து, தொடர்ந்து எங்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதோடு, சமீபத்தில் வெளிச்சந்தம் கொடி கம்ப பிரச்சனையில் கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கும் பதிவு செய்ய காரணமாகியுள்ளார் என கலெக்டர் சங்கீதா மீது விசிக-வினர் குற்றச்சாட்டி வருகிறார்கள். இப்பிரச்சனை தமிழக அளவில் கூட்டணிக்குள் சலசலப்பை உண்டாக்கியது.

அதுபோல், மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மக்களை திரட்டி வந்து மனு அளித்தும் பட்டா வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலெக்டர் சங்கீதா மீது குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியினரும் கலெக்டர் மீது குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் சங்கீதா

இதுகுறித்து நம்மிடம் பேசிய முக்கிய நிர்வாகிகள், "அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கைது செய்ய வலியுறுத்தி கடந்த 24- ஆம் தேதி கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை அறிவித்தோம். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மாவட்ட தலைவர் கார்த்திக்கேயன் தலைமையில், முன்னாள் எம்.பி விசுவநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றோம். நாங்கள் மனு அளிக்க வருவதை ஏற்கெனவே கலெக்டருக்கு தெரிவித்திருந்தோம். ஆனால், நாங்கள் சென்றபோது அங்கு அவர் இல்லை. தொடர்பு கொண்டதற்கு துணை கலெக்டரிடம் கொடுக்கச் சொன்னார். இது எங்களை அவமானப்படுத்துவதாக தெரிந்தது. கலெக்டரிடம் மனு கொடுக்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று அங்கேயே அமர்ந்து விட்டோம். அதற்கு பிறகுதான் அவர் வந்தார். இப்போது என்று இல்லை, எப்போதுமே இப்படி அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்திக்க கூட மறுப்பவராக இருக்கிறார். இதுகுறித்து எங்கள் தலைமையிடம் கூறி திமுக தலைமைக்கு தெரிவிப்போம்" என்றனர்.

இதற்கிடையே கலெக்டருக்கு எதிராக திருமாவளவன் தலைமையில் கடந்த 23 ஆம் தேதி நடக்கவிருந்த போராட்டத்தை விசிகவினர் தள்ளி வைத்துள்ளனர்.

திமுக கூட்டணி கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம், "கலெக்டர் தன் பணியை வழக்கம்போல் செய்கிறார். அவர் இயல்பாக செயல்படுவதைக் கூட எதிரானதாக புரிந்து கொள்கிறார்கள், அவ்வளவுதான்" என்றனர்.

Manmohan Singh: ``சூழ்ச்சி அரசியல் அவருக்கு வராது...'' - அப்பா குறித்து மனம் திறந்த மகள்

இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்ற பெரும் பொறுப்புடன் அதிகாரத்துக்கு வந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அதிரடி நடவடிக்கைகள், அரசியல் சூழ்ச்சிகள், நம்பிக்கை துரோகங்கள், பல்வேறு விமர்சனங... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை: ``யார் அந்த சார்னு தெரியணும்.." - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக் கழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் அதிகரிப்பதாக பா.ஜ.க தலைவர் அண்ணமலை சாட்டையால் ... மேலும் பார்க்க

Manmohan Singh: `9 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகு கேட்ட கேள்வி' -மெய்சிலிர்த்த மருத்துவர் பகிர்வு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2009-ம் ஆண்டு அவர் பிரதமராக இருந்த காலத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 10 முதல் 11 மணிநேரம் நீண்ட அந்த சிகிச்சைக்குப் பிறகு முதலில் அவர் கேட்டுத் தெரிந்துகொண்டத... மேலும் பார்க்க

மாறிய சாட்டை, வேடிக்கை பார்த்த நிர்வாகிகள்... அண்ணாமலை சாட்டையடி நிகழ்வு.. நடந்தது என்ன?

“திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன். அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம், திமுகவை கண்டித்து எனக்கு நானே சாட்டையடி கொடுத்துக் கொள்ளப் போகிறேன்.” என்று பாஜக மாநில... மேலும் பார்க்க

Manmohan Singh: ``எப்போதும் நீல நிற தலைப்பாகை அணிய காரணம் என்ன?'' -மன்மோகன் சிங் சொன்ன பின்னணி

இந்தியாவின் பொருளாதார சிற்பி எனப் புகழப்படும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92-வது வயதில் காலமானார். அவரின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்... மேலும் பார்க்க

கட்சி நன்கொடை: பாஜக-வுக்கு ரூ.2244 கோடி, காங்கிரஸுக்கு ரூ.289 கோடி; மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு...?

பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க தேர்தல் பத்திரம் என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. அதன் மூலம் அரசியல் கட்சிகளை மிரட்டி பா.ஜ.க பணம் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்... மேலும் பார்க்க