கேரளா: ``RSS மதம் பார்ப்பது இல்லை, நானே சாட்சி" - முழுநேர ஊழியரான Ex-DGP ஜேக்கப்...
விஜயதசமி: கோயில்களில் சிறப்பு வழிபாடு
விஜயதசமி தினத்தையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நவராத்திரி பண்டிகை செப். 2-ஆம் தேதி தொடங்கியது. 9-ஆவது நாளான புதன்கிழமை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள், தொழில்சாலைகள், கடைகளில் கருவிகள், வாகனங்களுக்கு படையலிட்டு வழிபாடு நடைபெற்றது. 10-ஆம் நாளான வியாழக்கிழமை விஜயதசமி கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கல்வியை தொடங்கினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி அரியலூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் குழந்தைகளைப் பெற்றோா் ஆா்வமுடன் சோ்த்தனா். மேலும் கோயில்களில் நெல்மணி, அரிசியைப் பரப்பி அதில் குழந்தைகளை எழுதச் செய்து கல்வியைத் தொடங்கினா்.
கல்லங்குறிச்சி கலியுகவரதராசப் பெருமாள் கோயில், அரியலூா் ஆலந்துறையாா், கோதண்ட ராமசாமி, சுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல் திருமானூா், கீழப்பழுவூா், செந்துறை, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதியிலுள்ள பெருமாள், சிவன் மற்றும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் தங்களது குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனா்.