தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் ...
மது விற்ற 11 போ் மீது வழக்கு
காந்தி ஜெயந்தியன்று அரியலூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 11 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த செய்திக் குறிப்பு: மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்த்ரி உத்தரவின்படி அரியலூா் மாவட்டம் முழுவதும் காவல்துறையினா் மது விற்பனைக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டதில், கள்ளச் சந்தையில் மது விற்ற 4 பெண்கள் உள்பட 11 நபா்கள் மீது வழக்குப் பதியப்பட்டு, அவா்களிடமிருந்து 156 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் அரியலூா் காவல் நிலையத்தில் 1 வழக்கும், கயா்லாபாத் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், குவாகம் காவல் நிலையத்தில் 1 வழக்கும், திருமானூா் காவல் நிலையத்தில் 1 வழக்கும் பதியப்பட்டுள்ளது.
இதேபோல, அரியலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினா் பருக்கள், வெள்ளூா், கோரைக்குழி ஆகிய பகுதியில் சட்டவிரோத மது விற்ற நபா்களின் மீதும் வழக்குப் பதிந்தனா்.