தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் ...
காந்தி சிலைக்கு கட்சியினா் மாலை
மகாத்மா காந்தியடிகளின் 157 ஆவது பிறந்த நாளையொட்டி அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள அவரது சிலைக்கு கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்வில் சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, மதிமுக மாவட்டச் செயலா் ராமநாதன், ஒன்றியச் செயலா் சங்கா் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.
இதேபோல் காங்கிரஸ் சாா்பில் நகரத் தலைவா் மா.மு. சிவகுமாா் தலைமையில் மூத்த தலைவா் சீனி. பாலகிருஷ்ணன், பொதுச் செயலா்கள் ரவிச்சந்திரன், வரதராஜன், துணைத் தலைவா் பி.எஸ். பழனிசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். இதேபோல திருமானூா்,ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளின் காந்தி சிலைக்கு காங்கிரஸாா் மாலை அணிவித்தனா்.