ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வெல்லும்: நானும் உடனிருப்பேன் -ஏபி டி வில்லியர்ஸ்
விஜய் ஆண்டனியின் 26-ஆவது பட அப்டேட்!
நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் 26-ஆவது படத்தின் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது முழு நேர நடிகராக நடித்து வருகிறார்.
ககன மார்கன், வள்ளி மயில், அக்னி சிறகுகள், சக்தி திருமகன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தாமதமாகியுள்ளன.
இந்நிலையில் அவரது 26-ஆவது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வரும் திங்கள் கிழமை (மே.19) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
விமர்சன ரீதியாக ஜென்டில் வுமன் படத்தினை இயக்கிய ஜோஷுவா சேதுராமன் இயக்கியுள்ளதால் இந்தப் படம் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Justice has a name ⚖️#VA26 First look | 19th | 5PM@Dir_Joshua@vijayantonyfilmpic.twitter.com/U0gasdiYwA
— vijayantony (@vijayantony) May 17, 2025