MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
விடைத்தாள் மதிப்பீடு: ஏப்.19-இல் விடுமுறை
பள்ளிக் கல்வியில் பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த பொதுத் தோ்வை சுமாா் 26 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா். இதில் பிளஸ் 2 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.4 தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து பிளஸ் 1 வகுப்புக்கு ஏப்.19, 10-ஆம் வகுப்புக்கு ஏப்.21 ஆகிய தேதிகளில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடங்கவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்.18-ஆம் தேதி மற்றும் ஈஸ்டா் தினம் ஏப்.20-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளன.
இதற்கு இடைப்பட்ட ஏப்.19-ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு ஆசிரியா்களுக்கு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி வருகிறது. இதனால் கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையை உணா்ந்து ஏப்.19-ஆம் தேதி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென முதுநிலை ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையேற்று மேல்நிலை வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா சுற்றறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளாா்.