விண்டேஜ் மாடலில் கவாஸகி எலிமினேட்டர் 500!
விண்டேஜ் மாடலில் நவீன அம்சங்களுடன் கவாஸகி எலிமினேட்டர் 500 பைக்கை கவாஸகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திள்ளது.
இந்த க்ரூஸர் பைக்கில் 451சிசி, இரட்டை லிக்விட் கூல்ட் என்ஜின் 45 குதிரைத்திறனுடன் 42.6nm முடுக்குவிசை திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் கூடிய 6 கியர் பாக்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது.
735 மில்லி மீட்டர் உயரம் கொண்ட சீட் வசதியுடன், 18 அங்குல மற்றும் 16 அங்குல சக்கரங்கள் அதில் டிஸ்க் பிரேக் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. புளூடூத் மூலம் ஸ்மார்ட் போனை இணைக்கும் வசதி, நேவிகேஷன், டிராக்ஷன் கண்ட்ரோல், ரைட் மோடுகள், டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகிய அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
குறைந்த அளவிலான சீட் கொடுக்கப்பட்டிருப்பதால், நீண்ட தூரம் சவாரி செய்வதற்கு ஏதுவாக விண்டேஜ் மாடலில் அதிநவீன மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதன் எடை 176 கிலோ. இதில், 13 லிட்டர் பெட்ரோல் டேங்க்கும், 29.5 கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை: ரூ.5.76 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கவாஸகி எலிமினேட்டருக்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர் இல்லை என்றாலும், குறைந்தவிலையில் பைக் வாங்க விரும்புபவர்களுக்கு ராயல் என்ஃபீல்டின் சூப்பர் மேடீயோர் 650 போட்டியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை: ரூ.3.68 லட்சம்.
இதையும் படிக்க: 2027-க்குள் புதிய மின்சார வாகனங்களை அறிமுகம் செய்யும் வோக்ஸ்வாகன்!