நாய்கள் முக்கியமா? குழந்தைகள் முக்கியமா? ஜி.பி. முத்துவுக்கு நடிகை பதிலடி!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!
இந்திய விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களுக்கு திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து மட்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆட்சேர்ப்பு திட்டத்தின் பெயர்: Agniveer Vayu (Sports)Intake - 1/2026
தகுதி: கணிதம், இயற்பியல் பாடங்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், , எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித் திருக்க வேண்டும். +2 , டிப்ளமோ படிப்பில் அனைத்து பாடங்களிலும் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2 தொழிற்கல்வி பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 1.1.2005-க் கும் 1.7.2008-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்கவேண்டும்.
விளையாட்டுத் தகுதி: கீழ்வரும் விளையாட்டுகள் ஏதாவதொன்றில் சீனியர், ஜூனியர் பிரிவில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அல்லது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அல்லது பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று விளையாடியிருக்க வேண்டும்.
தடகளம், புல்வெளி டென்னிஸ், கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிள், கிரிக்கெட், கால் பந்து, ஹாக்கி, கபடி, கைப்பந்து, ஸ்குவாஷ், வாலி பந்து, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், வாட்டர் போலோ, நீச்சல்/ டைவிங், சைக்கிள் போலோ, சதுரங்கம், கோல்ஃப், பளு தூக்குதல் போன்ற விளையாட்டு உட்பிரிவுகள், தகுதிகள் பற்றிய விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
உடற்தகுதி : குறைந்தபட்சம் 152.5 செ.மீ.உயரமும், உயரத்திற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண் டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ. அகலம், விரிவடைந்த நிலையில் 82 செ.மீ. அகலம் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டுத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.40.000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக நேர்முகத்தேர்வு மற்றும் விளையாட்டுத் திறனறியும் தேர்வு நடத்தப்படும். விளையாட்டுத் திறன் தேர்வு செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும். இது குறித்த விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.8.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.