செய்திகள் :

விண்வெளி விஞ்ஞானியாவது எப்படி? யாரெல்லாம் ஆக முடியும்?

post image

விண்வெளி விஞ்ஞானி என்ற பணி பெயரையும் புகழையும் நல்ல சம்பளத்தையும் கொடுத்தாலும் எல்லோராலும் விண்வெளி விஞ்ஞானி ஆகிவிட முடியாது.

அந்தப் பணியில் ஏகப்பட்ட ஆபத்துகள் இருந்தாலும், அதி தீவிர உடல் பாதிப்புகள், இயல்பான வாழ்க்கையிலிருந்து தள்ளியிருப்பது போன்றவற்றை எல்லாம் தாண்டி விண்வெளி விஞ்ஞானிகளுக்கு கிடைக்கும் கௌரவம்தான், அந்தப் பணியை பலரும் நாடிச் செல்ல காரணமாக இருக்கிறது.

ஒருவர் விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்றால், பொறியியல், உயிரி அறிவியல், உடலியக்க அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று ஒரு சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

அல்லது இயற்பியல், விண்வெளித்துறை அல்லது விண்வெளி இயற்பியலில் பிஎச்டி முடித்தவராகவும், இதில் ஏதேனும் ஒரு துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஏதேனும் பிரச்னை அல்லது சிக்கல்களுக்கு தீர்வு கண்டுபிடித்திருந்தாலும் விஞ்ஞானி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

விமான ஓட்டுநர்களாக பணியாற்றுவோர், குறைந்தது ஜெட் விமானங்களை 1000 மணி நேரம் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்கும் நபர்களாக இருக்க வேண்டும். அந்த குறைந்தபட்ச தகுதியை வைத்துத்தான் நாசா தனது பணிக்குத் ஆள்களைத் தேர்வு செய்கிறது. பிறகு, உடல் தகுதி கட்டாயம். பிறகு, விண்வெளியில் நிலவும் கால நிலையை தாங்கும் திறன் இருப்பதை உறுதி செய்யும் மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்படும்.

ரஷிய மொழி உள்பட பல நாட்டு மொழிகளில் நிபுணத்துவம் பெற்றிருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

இவ்வாறு ஒரு விஞ்ஞானியாகிவிட்டால், லட்சக் கணக்கில் மாதச் சம்பளம், கூடுதல் படிகள், உயர்தர மருத்துவ வசதிகள் என அனைத்தும் கிடைக்கும்.

இஸ்ரோ விஞ்ஞானியாக..

12ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் எடுத்துப் படித்து, பின், எலக்ட்ரானிக்ஸ் அல்லது கணினி அறிவியல் அல்லது மெக்கானிக்கல் துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள், இஸ்ரோவின் ஐசிஆர்பி தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அடுத்து நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்களில் பங்கேற்று தேர்ச்சி பெற்றால் விண்வெளி விஞ்ஞானியாக முடியும்.

இங்குப் படித்தால் விண்வெளித் துறையில் வேலை கிடைக்கும் என்று சொல்லுமளவுக்கு இந்தியாவில் பல கல்லூரிகள் இயங்குகின்றன.

இந்தியாவில் உள்ள ஐஐடிகள், இந்திய அறிவியல் மையம் பெங்களூரு, இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மையங்கள், எம்ஐடி - சென்னை, மணிப்பால் தொழில்நுட்பக் கல்வி மையம் உள்ளிட்டவற்றில் பட்டம் பெறும் பட்டதாரிகள் விண்வெளி மையப் பணிக்கான வாய்ப்பை எளிதாகப் பெறலாம்.

‘இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன’: ஜகதீப் தன்கா் பேச்சு

புது தில்லி: ‘இக்கட்டான சூழல்களில், கட்சி வேறுபாடுகளை மறுந்து நமது அனைவரின் இதயங்களும் இணைக்கப்பட்டுள்ளன’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய அரசு

புது தில்லி: ‘நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சா்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவித தளா்வும் இருக்காது’ என்... மேலும் பார்க்க

சக்கர நாற்காலி வழங்காததால் மூதாட்டி விழுந்த சம்பவம்: ஏா்-இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்- மத்திய அரசு உறுதி

புது தில்லி: தில்லி விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் 85 வயது மூதாட்டி கீழே விழுந்த சம்பவம் தொடா்பாக ஏா் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்; அதனடிப்படையில் உரி... மேலும் பார்க்க

ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கு: அதானி சகோதரா்கள் விடுவிப்பு

மும்பை: ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கிலிருந்து தொழிலதிபா் கெளதம் அதானி, அவரின் சகோதரா் ராஜேஷ் அதானியை மும்பை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது. சுமாா் ரூ.388 கோடி அளவுக்கு பங்குச்சந்தை மோ... மேலும் பார்க்க

போலி வாக்காளா் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையிலிருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

போலி வாக்காளா் அட்டைகள் சா்ச்சை மீதான விவாதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடா்ந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையிலிருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன. வெவ்... மேலும் பார்க்க

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தொற்றுநோய் தடுப்பு தயாா் நிலைக்கு இந்திய கூடுதலாக ரூ. 104 கோடி வழங்கும்: அனுப்ரியா படேல் தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் உலகளவில் தொற்றுநோய் தடுப்புக்கான தயாா்நிலை, எதிா்கொள்வதற்கான செயல்பாடுகளுக்குரிய நிதியத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா கூடுதலாக 12 மில்லிய... மேலும் பார்க்க