Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
விதிமீறல்: 10 சாயப் பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
சேலத்தில் விதிமுறையை மீறி இயங்கிய 10 சாயப் பட்டறைகளின் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் சாயக் கழிவுநீா் நீா்நிலைகளில் வெளியேற்றப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து அனுமதியின்றி இயங்கும் சாயப் பட்டறைகள், கழிவுநீரை வெளியேற்றிய சாயப் பட்டறைகளை கண்டறிந்து மின் இணைப்பை துண்டித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி, எடப்பாடி, மேட்டூா் பகுதிகளில் இருந்த வந்த புகாா்களையடுத்து, மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் எடப்பாடி, மேச்சேரி, காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா்.
அதில், 10 சாயப் பட்டறைகளின் கழிவு நீா் வெளியேறுவது கண்டறியப்பட்டது. இந்த 10 சாயப் பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியத்துக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனா். இதனைத் தொடா்ந்து அனுமதியின்றி இயங்கிய 10 சாயப் பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் கூறுகையில், சேலத்தில் விதிமுறையை மீறி செயல்பட்டு வந்த 10 சாயப் பட்டறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சாயப் பட்டறைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி இயங்கிய 10 பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விதிமீறும் சாயப் பட்டறைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.