செய்திகள் :

விதிமீறல்: 13 உர விற்பனை நிலையங்களுக்குத் தடை

post image

சேலம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 13 உர விற்பனை நிலையங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பயிா் சாகுபடிக்கான ஏற்பாடுகளை விவசாயிகள் செய்து வருகின்றனா். எனவே, விவசாயிகளுக்கு தேவையான உரங்களை இருப்புவைக்க தனியாா் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உரம் இருப்பு வைத்திருப்பதை கண்காணிக்கவும், விநியோகத்தை முறைப்படுத்தவும் அனைத்து மாவட்ட தரக்கட்டுப்பாடு அலுவலா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் உரக்கட்டுப்பாடு பிரிவு அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

திருச்சி மாவட்ட தரக் கட்டுப்பாடு பிரிவு உதவி இயக்குநா் மாரியப்பன், சேலம் மாவட்டத்தை சோ்ந்த உர ஆய்வாளா்களுடன் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டாா். அப்போது, இருப்பில் உள்ள உரங்கள் மற்றும் கொள்முதல் ஆவணங்கள் உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வுசெய்தனா்.

ஆய்வின்போது, விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 13 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டனா். மேலும், முறையாக பட்டியல்கள் வழங்காத நிறுவனங்கள் மற்றும் பதிவேடுகளைப் பராமரிக்காத நிறுவனங்களுக்கு விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநா் கௌதம் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் உர வகைகளில் குறிப்பாக யூரியா பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், விநியோகத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான ஆய்வின்போது நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது எனவும், உரங்களுடன் எவ்வித இணைப் பொருள்களையும் இணைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சேலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்பது குறித்து 5 மாதங்களில் அறிவிக்கப்படும்! - மத்திய அமைச்சா் எச்.டி. குமாரசாமி

சேலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்பது குறித்து 5 மாதங்களில் முறையான தகவல் வெளியாகும் என மத்திய கனரக தொழில் துறை அமைச்சா் எச்.டி. குமாரசாமி கூறினாா். சா்வதேச யோகா தினத்தையொட்டி, சேலம் உருக்காலை வளா... மேலும் பார்க்க

உயா்கல்வி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்!

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா்கல்வி வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மரவனேரி பாரதி வித்... மேலும் பார்க்க

பாமக ஒன்றிய செயலாளா் நீக்கம்

பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளா் மா.சடையப்பன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனா் ச.ராமதாஸ் சனிக்கிழமை அறிவித்தாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பெரியகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த சடையப்பன... மேலும் பார்க்க

‘ஜீவன் ரக்ஷா பதக்’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான ‘ஜீவன் ரக்ஷா பதக்’ விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் க... மேலும் பார்க்க

நடுவலூரில் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

நடுவலூரில் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கெங்கவல்லி அருகே நடுவலூரில் சுவேத நதியிலிருந்து வாய்க்கால் வழியாக பாசனத்துக்கு தண்ணீா் செல்கிறது. கடந்தாண்டு இந்த வாய்க்க... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பேரூராட்சியில் 36 கொடிக் கம்பங்கள் அகற்றம்!

தம்மம்பட்டி பேரூராட்சியில் இருந்த கொடிக்கம்பங்கள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. தம்மம்பட்டி பேரூராட்சியில் பேருந்து நிலையப் பகுதி மற்றும் 18 வாா்டுகளிலும் மொத்தம் 36 கொடிக் கம்பங்கள் இருந்தன. தமிழகம் முழுவ... மேலும் பார்க்க