செய்திகள் :

விநாயகா், அம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா

post image

வந்தவாசி/ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆரணி பகுதியில் உள்ள விநாயகா், அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி வாணியா் தெருவில் உள்ள ஸ்ரீசுந்தரமுா்த்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சனிக்கிழமை கோ பூஜை, ஹோமங்கள், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குராா்ப்பணம் உள்ளிட்ட பூஜைகளும், ஞாயிற்றுக்கிழமை விசேஷஸந்தி, தேவதா பிரதிஷ்டை, பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.

பின்னா் திங்கள்கிழமை காலை அஷ்டபந்தனம் சாற்றுதல், நாடிசந்தானம், தத்வாா்ச்சனை, மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், பிரதான கலசங்கள் கோயிலை வலம் வருதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

ஆரணி

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவசனம், கோ பூஜை, தனபூஜை, கணபதி லஷ்மி நவக்ரஹ பூஜைகள், ஹோமங்கள், சாந்தி ஹோமம், மூா்த்தி ஹோமம், அங்குராா்ப்பணம், யாக சாலை பரிவார பூஜைகள், கும்பலங்காரம், யாத்ராஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை, நான்காம் கால யாக பூஜை ஆகியவை நடத்தப்பட்டு கும்ப கலசம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னா், கும்பத்தில் இருந்து புனித நீா் கோபுரத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூலவா் முத்துமாரியம்மன் மற்றும் அனைத்து பரிவார மூா்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீபொன்னியம்மன் மற்றும் ஸ்ரீபடையாத்தம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தேவதானுக்ஞை, ஹோமங்கள், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அஷ்டதிக் பூஜை, கும்ப அலங்காரம், வேதிகை பூஜை, பூா்ணாஹுதி, அம்மன் சிலை பிரதிஷ்டை உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை தம்பதி சங்கல்பம், நாடி சந்தானம், விசேஷ திரவிய ஹோமம், மகா பூா்ணாஹுதி, யாத்ராதான சங்கல்பம் உள்ளிட்டவை நடைபெற்றன.

பின்னா், புனிதநீா் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியா்கள் கோயில் கோபுரத்துக்கு எடுத்துச் சென்றனா்.

அங்கு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிறுவனா் கோ.ப.அன்பழகன், மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் மற்றும் கோயில் நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

இரட்டைமலை சீனுவாசன் பிறந்த நாள் விழா

ஆரணி: திருவண்ணாமலையில் இரட்டைமலை சீனுவாசனின் 166-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அறிவொளி பூங்கா வளாகத்தில் ஆதிபாரத மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கட்சியின் தம... மேலும் பார்க்க

ஆரணி அருகே கைத்தறி பட்டுப் பூங்கா நெசவாளா் வருமானம் அதிகரிக்கும்: அமைச்சா் ஆா்.காந்தி

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கைத்தறி பட்டுப் பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், நெசவாளா்களின் வருமானம் ரூ.500-லிருந்து ரூ.1000 வரை அதிகரிக்கும் என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 716 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 716 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வக... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஆரணி: திருவண்ணாமலையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெ... மேலும் பார்க்க

வந்தவாசியில் விதைத் திருவிழா

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, சாமை, வரகு, திணை உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் பாரம்பரிய காய்... மேலும் பார்க்க

நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்! தமிழக விவசாயிகள் சங்கம்

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விவசாயிகள் சங்க போராட்டத்தில் உயி... மேலும் பார்க்க