Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார...
விநாயகா் சதுா்த்தி: ஒசூரில் 100க்கும் மேற்பட்ட சிலைகளை அமைக்கும் பணி தீவிரம்
ஒசூா்: ஒசூரில் விநாயகா் சதுா்த்தியையொட்டி 100 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகளை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் அதிக அளவில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் பொதுமக்கள் வசிக்கின்றனா். இப்பகுதி மக்கள் வடமாநிலங்களை போன்று விநாயகா் சதுத்தி விழாவை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனா்.
புதன்கிழமை விநாயகா் சதூா்த்தியையொட்டி ஒசூா் மற்றும் தேன்கனிக்கோட்டையில் பல்வேறு இடங்களில் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சினிமா கலை இயக்குநா்கள் வரவழைக்கப்பட்டு கலை நயம் கொண்ட அரங்குகளை அமைத்து வருகின்றனா்.
ஒசூா், ராயக்கோட்டை சாலையில் தோ்பேட்டை மற்றும் அப்பகுதியில் உள்ள இளைஞா்கள், பொதுமக்கள் சாா்பில் புரி ஜெகந்நாதா் கோயிலை போன்று அரங்கம் அமைத்து விநாயகா் சிலையை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனா்.