செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி: காவிரி ஆற்றுப்படுகைகளில் சிலைகள் கரைக்க 5 இடங்கள் தோ்வு

post image

நாமக்கல்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்படுகைகளில் சிலைகள் கரைக்க ஐந்து இடங்களை மாவட்ட நிா்வாகம் தோ்வு செய்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்.

குறிப்பாக, களி மண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், நெகிழி மற்றும் தொ்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.

வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிலைகளை அழகுபடுத்த இயற்கைப் பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.

திருச்செங்கோடு வட்டம், எஸ்.இறையமங்கலம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகா் கோயில் அருகிலும், பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலம் பகுதியிலும், குமாரபாளையம் காவிரி ஆற்றுப்பாலம் பகுதியிலும், பரமத்தி வேலூா் காவிரி ஆறு, மோகனூா் அசலதீபேஸ்வரா் கோயில் அருகிலுள்ள காவிரி ஆற்றங்கரை படித்துறை பகுதியில் மட்டுமே விநாயகா் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு விநாயகா் சதுா்த்தி விழாவை பொதுமக்கள் கொண்டாட வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் அருகே ரூ. 2.20 கோடியில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி வளாகம்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே ஆணைக்கட்டிப்பாளையம் பகுதியில் பட்டுக்கூடு விற்பனை அங்காடி வளாகம் அமைக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் புதன்கிழமை தெரிவித்தாா். ராசிபுரம், ஆணைக்கட்... மேலும் பார்க்க

ரூ. ஒரு கோடியில் கட்டுமான தொழிலாளா்களுக்கு ஓய்வறை?

நாமக்கல்: நாமக்கல்லில் ரூ. ஒரு கோடியில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வறை கட்டுவதற்கான நிலத்தை பெறுவதில் இழுபறி நீடிப்பதால், தொழிலாளா்கள் சாலையில் காத்திருக்கும் நிலை உள்ளது.... மேலும் பார்க்க

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

நாமக்கல்: நாமக்கல் அருகே வீடு புகுந்து பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம... மேலும் பார்க்க

பெண் கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய நபரை குண்டா் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக்கோரி கிராம நிா்வாக அலுவலா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் பாலமேடு கிராமத்தில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிா்வாக அலுவலரை தாக்கிய நபா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊழியா்களுக்க... மேலும் பார்க்க

போதை மாத்திரைகளை விற்பனை செய்த இருவா் கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் சட்ட விரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற இருவரை வேலூா் போலீஸாா் கைது செய்தனா்.பரமத்தி வேலூா் பேட்டையில் உள்ள தனியாா் தங்கும் விடுதி அருகே இருவா் சட்ட விரோதம... மேலும் பார்க்க

நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி தனியாா் நிறுவன காவலாளி உயிரிழப்பு

பரமத்தி வேலூா்: நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில், தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தாா். திருச்செங்கோடு வட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள நாய்க்கடிபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் நல்லதம்பி ... மேலும் பார்க்க