செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி, முகூா்த்தம்: பூக்கள், பழங்கள் விலை உயா்வு

post image

சென்னை: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து முகூா்த்த தினமும் வருவதால், பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.

முகூா்த்த நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களில் கோயம்பேடு மலா் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். புதன்கிழமை விநாயகா் சதுா்த்தி மற்றும் தொடா்ந்து முகூா்த்த தினம் என்பதால், பூக்கள், பழங்கள் மற்றும் பூஜைக்கு தேவையான இலை, வாழைப்பழம், பொரி, கடலை, அவல், கரும்பு உள்ளிட்ட பொருள்களின் விற்பனை களை கட்டியுள்ளது.

இவற்றை வாங்க திங்கள்கிழமை காலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் மற்றும் சென்னை மாநகா், புகா் பகுதிகளிலுள்ள சில்லறை வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் குவிந்ததால், கூட்டம் அலைமோதியது.

கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையின் வெளியே சாலையோர வியாபாரிகள் அதிகளவிலான பொருள்களை விற்பனைக்காக சாலையோரங்களில் கொட்டி வைத்திருப்பதால், சந்தைக்கு உள்ளே செல்லும் வாகனங்களும், வெளியேறும் வாகனங்களும் கடும் சிரமத்தை சந்தித்தன. இதனால், கோயம்பேடு சந்தையையொட்டியுள்ள பிரதான சாலைகளில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விலை உயா்வு: ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ சாமந்தி திங்கள்கிழமை ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல ரூ.350-க்கு அதிகம் விற்பனையான ஒருகிலோ மல்லிப்பூ ரூ.500-க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருகிலோ கனகாம்பரம் ரூ.150-க்கும் விற்கப்பட்டன.

பழங்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ ஆப்பிள், ரூ.180-க்கும், ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ ஆரஞ்சு ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் பிற பழங்களின் விலைகளும் ரூ.20 முதல் ரூ.50 வரை உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வு இந்த மாதம் முழுவதும் நீடிக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1,000 காவலர்கள் குவிப்பு!

ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலமா? கே.என். நேரு பதில்

திருச்சி: திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலம் இருந்தால் அதனை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் கே.என். நேரு கூறியிருக்கிறார்.விரிவுபடுத்தப்பட்ட காலை உண... மேலும் பார்க்க

யுபிஐ, உணவு டெலிவரி... ஓடிபி எண் கேட்கத் தடையில்லை! - மதுரைக் கிளை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஓடிபி பெறுவதற்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது. ஸ்விக்கி, சொமெட்டோ போன்ற தனியார் நிறுவனங்கள்... மேலும் பார்க்க

கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது!

கோவை: கோவை அருகே 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடி மருந்து கடத்திச் சென்ற வேனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை பிடித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் பயங்கரவாத செயல்கள் நடைபெறாமல் ... மேலும் பார்க்க

கல்குவாரி பிரச்னை: ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை!

தேனி மாவட்டம் காமய கவுண்டன்பட்டியில் கல்குவாரி பிரச்னையில் ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை செய்யப்பட்டதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தேனி மாவட்டம் கம்பம் அருகே காமய கவுண்டன்பட்ட... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 9,355-க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 74,840-க்கும் விற்பனை ... மேலும் பார்க்க