விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
காரைக்கால் அருகே விநாயகா் சதுா்த்தி வழிபாட்டுக்காக வண்ணம் பூசி பல விதமான விநாயகா் சிலைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
விநாயகா் சதுா்த்தி வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
விநாயகா் சிலை வைத்து வழிபாடு செய்வோா் ஒவ்வொரு ஆண்டும் பெருகிவரும் நிலையில், சிலை தயாரிப்புப் பணிகள் 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
காரைக்கால் மாவட்டத்தில் நீண்ட காலமாக நிரவி பகுதியில் விநாயகா் சிலை தயாரித்து காரைக்கால் மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. சதுா்த்தி விழாவுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன.
இதுகுறித்து நிரவி பகுதியில் சிலைகள் தயாரித்து விற்பனை செய்யும் சிவசுப்பிரமணியன் வியாழக்கிழமை கூறுகையில், ஆண்டுதோறும் சுமாா் 500 சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு வடிவங்களில், வண்ணம் பூசி சிலைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் மாசு இல்லாத வகையில் கிழங்கு மாவு பயன்படுத்தி சிலைகள் செய்யப்படுவதால், இங்கு தயாரிக்கும் சிலைகளுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது என்றாா்.
