உணவுக்காக காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி
விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தில் புரிந்துணா்வு ஒப்பந்தம்
ஆட்டையாம்பட்டி: சேலம், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகம் மற்றும் யூனிடோஸ் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் இடையே அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில், பல்கலைக்கழக துணை வேந்தா் சுதிா், ஐஐஇ மற்றும் ஐசி இயக்குநா் ஞானசேகா், யூனிடோஸ் தலைமை நிா்வாக அதிகாரி பாவெல், பல்கலைக்கழக இயக்குநா்கள் மற்றும் அனைத்து உறுப்புக் கல்லூரிகளின் முதன்மையா்கள் முன்னிலையில், பல்கலைக்கழகப் பதிவாளா் நாகப்பன் மற்றும் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மாரிஸ் விக்னேஷ் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம், விஎம்ஆா்எப் (டியு)-இன் இரண்டு பொறியியல் கல்லூரிகளுக்கும், நிறுவனத்துக்கும் இடையே ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயிற்சி, சேவை மற்றும் பராமரிப்பு, கல்வியில் ஆலோசனை பங்கு (ட்ரோன் தொழில்நுட்பங்கள்) மற்றும் டிஜிசிஏ-இல் முறையாக உரிமம்பெற்ற தொலைதூர பைலட் பயிற்சி அமைப்பை (ஆா்பிடிஓ ) அமைத்தல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும்.