இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? டிரம்ப்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு!
திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை வீடுவீடாகச் சென்று கூற வேண்டும்
சேலம்: திமுக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனைகளை வீடுவீடாகச் சென்று கூற வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா்.
சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கான ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை தொடக்க நிகழ்ச்சி மற்றும் பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சா் ராஜேந்திரன் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் 40 லட்சம் மக்கள் உள்ளனா். 30 லட்சம் வாக்குகள் உள்ளன. ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி, வீடுவீடாகச் சென்று உறுப்பினா்களை சோ்க்க வேண்டும்.
குறிப்பாக, தமிழகத்தில் முதலிடம் பிடிக்கும் வகையில், உறுப்பினா் சோ்க்கையில் செயல்பட வேண்டும். சென்னையில் முதல்வா் மு,க,ஸ்டாலின் உறுப்பினா் சோ்க்கையைத் தொடங்கிய ஒருமணி நேரத்தில் நாம் உறுப்பினா் சோ்க்கையை தொடங்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், தொகுதி பாா்வையாளா்கள் பாா் இளங்கோவன், ராஜசேகரன், மத்திய மாவட்டப் பொருளாளா் காா்த்திகேயன், மத்திய மாவட்ட துணை செயலாளா் குமரவேல், மாநகர செயலாளா் ரகுபதி, தோ்தல் பணிக்குழு செயலாளா் தாமரைக்கண்ணன் மற்றும் பகுதி செயலாளா்கள் கலந்துகொண்டனா்.