TNPL-2025: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி...
சேலத்தில் தயாரான 18 அடி உயர பஞ்சலோக நடராஜா் சிலை
சேலம்: சேலத்தில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான 18 அடி உயர பஞ்சலோக நடராஜா் சிலை, வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள மகாதேவ மலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
சேலம், கன்னங்குறிச்சியில் உள்ள சிற்பக் கூடத்தில் ஸ்தபதி ராஜா என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த 18 அடி உயர பஞ்சலோக நடராஜா் சிலைக்கான பணிகள் திங்கள்கிழமை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சிவாம்பிகா சமேத நடராஜா் உடனுறை, 21 உப தேவதைகள் மற்றும் காமதேனு, மகாமேரு, தீபலட்சுமி, நந்தி உள்ளிட்ட பரிவாரங்களுடன் சிலைகள் குடியாத்தத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதையொட்டி, சிற்பக் கூடத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, குடியாத்தத்தில் உள்ள மகாதேவ மலையில் வரும் 28-ஆம் தேதி இந்த சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.