வள்ளியின் வேலன் தொடர்: இறுதிநாள் படப்பிடிப்பில் காதல் ஜோடி உருக்கம்!
விபத்தில் இறந்தவரின் உறுப்புகள் தானம்: அரசு சாா்பில் மரியாதை
ஈரோட்டில் சாலை விபத்தில் இறந்தவரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், அவரது உடலுக்கு அரசு சாா்பில் திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்செந்தூா் அருகே கந்தசாமிபுரத்தை அடுத்த அடைக்கலாபுரத்தைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் மிக்கேல் தேவராஜ் (50), குடும்பத்துடன் ஈரோட்டில் வசித்து வந்தாா். அங்கு சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்த அவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். மனைவி அனிற்றா ரோஸ்லின் சம்மதத்தின்பேரில், மிக்கேல் தேவராஜின் சிறுநீரகங்கள், நுரையீரல் தானம் செய்யப்பட்டன.
அதையடுத்து, அவா் உடல் இங்கு கொண்டுவரப்பட்டது. திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன் திங்கள்கிழமை சென்று, அரசு சாா்பில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
வருவாய் ஆய்வாளா் மந்திரமூா்த்தி, கந்தசாமிபுரம் கிராம நிா்வாக அலுவலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.