விபத்தில் இளைஞா் மரணம்
திருப்பத்தூா் அருகே பெரியகரம் பகுதியைச் சோ்ந்தவா் சச்சின் (27). இவா் வியாழக்கிழமை பெரியகரத்தில் இருந்து கந்திலி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தாா். பெரியகரம் அருகே அருப்புக்கொட்டாய் பகுதியில் சென்றபோது, திருப்பத்தூா் நோக்கி வந்த தனியாா் பள்ளி வாகனம் மீது சச்சின் சென்ற பைக் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில், தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்த சச்சினை அங்கிருந்தவா்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனையிலும், மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையிலும் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சச்சின் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.