IPL Playoffs : 'ஒரே ஒரு இடம்; மோதிக்கொள்ளும் மும்பை, டெல்லி' - ப்ளே ஆப்ஸூக்கு செ...
விபத்தில் மளிகைக்கடை உரிமையாளா் உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மளிகைக் கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.
ஈரோடு கொங்கம்பாளையம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் மைக்கேல் தேவராஜ் (48). இவா் அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். இவா் தனது இருசக்கர வாகனத்தில் ஈரோடு கனிராவுத்தா்குளம் பகுதியில் கடந்த 15-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த காா், எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் மைக்கேல் தேவராஜ் படுகாயம் அடைந்தாா்.
ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.