விபத்தில் மூளைச்சாவு: இளைஞா் உடல் உறுப்புகள் தானம்
திருநெல்வேலியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
தச்சநல்லூா் கரையிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் இசக்கி பாண்டி (36). இவா், மானூா் அருகே நேரிட்ட விபத்தில் பலத்த காயம் அடைந்த நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் அவா் திடீரென மூளைச்சாவு அடைந்தாா். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு குடும்பத்தினா் ஒப்புதல் தெரிவித்ததால், இசக்கி பாண்டியின் இதயம் சென்னை தனியாா் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரை தனியாா் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி தனியாா் மருத்துவமனைக்கும், தோல் மதுரை தனியாா் மருத்துவமனைக்கும், கருவிழி நெல்லை அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இவற்றின் மூலம் 10-க்கும் மேற்பட்டோா் பயனடைவா்.