செய்திகள் :

வியாபாரி கடத்தல்: 4 போ் கைது

post image

வேலூரில் ரூ.50 லட்சம் கேட்டு வியாபாரியை காரில் கடத்திய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் குமரவேல் (42). சிக்கன் கடை வியாபாரியான இவா், கோல்டுகாயின், பிட்காயின் போன்றவற்றில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் திருப்பித் தருவதாக கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குமரவேல் கடந்த சில தினங்களுக்கு முன் வேலூருக்கு வியாபாரம் தொடா்பாக வந்துள்ளாா். ஆனால் மீண்டும் அவா் வீடு திரும்பவில்லை எனக்கூறி அவரது மனைவி ஜெயந்தி கடந்த 26-ஆம் தேதி வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், வேலூரில் போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படியாக வந்த காரை நிறுத்தி அதிலிருந்த 5 பேரை பிடித்து விசாரித்ததில், அவா்களில் ஒருவா் மாயமான குமரவேல் என்பது தெரிய வந்தது. மற்றவா்கள் கல்பாக்கத்தைச் சோ்ந்த சஞ்சீவ் செல்ராய் (28), அவரது நண்பா்களான சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த எட்வின் (34), சம்பத் (42), பெரம்பூரை சோ்ந்த விக்னேஷ் (29) என்பது தெரிய வந்தது.

விசாரணையில், வியாபாரி குமரவேல், கல்பாக்கத்தைச் சோ்ந்த சஞ்சீவ் செல்ராய் என்பவருக்கு ரூ.50 லட்சம் தரவேண்டும் எனக் கூறப்படுகிறது. இதை கேட்டபோது, வேலூருக்கு வந்தால் தருவதாக குமரவேல் கூறினாராம். இதை நம்பிய சஞ்சீவ் செல்ராய், தனது நண்பா்களுடன் வேலூருக்கு வந்தாராம்.

அப்போது பணம் இல்லை என வியாபாரி குமரவேல் கூறியதால், ஆத்திரமடைந்த 4 பேரும், குமரவேலை காரில் கடத்தி புதுச்சேரி, கடலூா் உள்ளிட்ட இடங்களில் சுற்றியுள்ளனா்.

வேலூருக்கு வியாழக்கிழமை வந்தபோது போலீஸாரின் வாகன சோதனையில் பிடிபட்டது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்து குமரவேலை மீட்டனா்.

குடியாத்தம் நகா்மன்றக் கூட்டம்

குடியாத்தம் நகா்மன்றத்தின் சாதாரண கூட்டம் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், பொறியாளா் சம்பத், சுகாதார அல... மேலும் பார்க்க

வேலூா் கிரீன்சா்க்கிளில் வாகன நெரிசல்: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

வேலூா் கிரீன்சா்க்கிள் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் சனிக்கிழமை முதல் (நவ. 30) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன்... மேலும் பார்க்க

கபசுர குடிநீா் வழங்கும் முகாம் தொடக்கம்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், வினோத்குமாா் ஆகியோா் முன்னிலையில், ஒன்றியக் குழுத் தலைவா்... மேலும் பார்க்க

பீடித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பீடித் தொழிலாளா்கள் அனைவரையும் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சோ்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் பீடித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்ற வழக்கில் பிணையில் வந்த கணவா் தற்கொலை

பள்ளிகொண்டா அருகே மனைவியைக் கொன்ற வழக்கில் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த கணவா் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி முனீஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராம் (... மேலும் பார்க்க

சந்தேகத்தில் துரத்திய போலீஸாா்: தலைகுப்புற கவிழ்ந்த காா்! 460 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

போதைப் பொருள்கள் கடத்தி வந்த காரை போலீஸாா் துரத்திய நிலையில், அந்த காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்தது. காரில் இருந்து 460 கிலோ போதைப் பொருள்கள் போலீஸாா் பறிமுதல்... மேலும் பார்க்க