செய்திகள் :

விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வென்றதில் மிக்க மகிழ்ச்சி: கிறிஸ் கெயில்

post image

நீண்ட ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பைக்கான தேடலில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று 18 ஆண்டுகளாக தொடர்ந்த கோப்பைக்கானத் தேடலை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்படது முதல் அந்த அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, ஐபிஎல் கோப்பையை வென்றவுடன் கண்ணீர் மல்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி மற்றும் நல்ல நண்பர் விராட் கோலி வென்றதில் மிக்க மகிழ்ச்சி என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் கோப்பையை வென்றதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். விராட் கோலிக்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 18 ஆண்டுகளாக கோப்பையை வெல்வதற்காக காத்திருந்தோம். நான் ஏற்கனவே கூறியதைப் போல, காத்திருப்போருக்கு நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும்.

ஐபிஎல் கோப்பையை தூக்கிப் பிடிப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. ஆர்சிபி கோப்பையை வெல்வதை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அணியில் இல்லாவிட்டாலும் ஐபிஎல் கோப்பையை தொடும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவழியாக கோப்பையை வென்றுவிட்டோம் என்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அடுத்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் கோப்பையை வெல்லும் என நம்புகிறேன் என்றார்.

இதையும் படிக்க: பும்ரா தோற்றுவிட்டார், விரைவில் ஓய்வை அறிவிக்கலாம்: முன்னாள் இந்திய வீரர்

Chris Gayle has expressed his happiness over the Royal Challengers Bangalore winning the IPL trophy, which has been in the hunt for the IPL trophy for many years.

5-ஆம் நாளில் ரிஷப் பந்த் பேட்டிங் செய்வார்: பேட்டிங் பயிற்சியாளர்

காயமடைந்த ரிஷப் பந்த் இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டின் ஐந்தாம் நாளில் பேட்டிங் செய்வார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆண்டர்சன் - டெண்டுலகர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. ந... மேலும் பார்க்க

அதிரடி பேட்டிங், அசத்தல் கேட்ச்: ஃபார்முக்கு திரும்பிய மேக்ஸ்வெல்!

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் க்ளென் மேக்ஸ்வெல் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். 36 வயதாகும் க்ளென் மேக்ஸ்வெல் தனது அதிரடியான பேட்டிங்கிற்காக புகழ்ப்பெற்றவர். ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில்... மேலும் பார்க்க

46 ஆண்டுகளுக்குப் பிறகு... கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் புதிய சாதனை!

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களுக்கு ஆட்டம... மேலும் பார்க்க

4-0: தொடரும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி டெஸ்ட் தொடரை வென்று... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை; செப்.14-ல் இந்தியா - பாக். மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: 3 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. த்ரில் வெற்றி!

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூஸிலாந்து த்ரில் வெற்றி பெற்றது. New Zealand vs South Africa, Final - New Zealand won by 3 runs மேலும் பார்க்க