துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண் போலீஸ்.. நாகை ஆட்சியர் அலுவலகத...
விராலிமலையில் முதல்முறையாக நால்வா் பெரு விழா
விராலிமலையில் நால்வா் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோவிலை மையமாகக் கொண்டு பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. வைகாசி விசாகம், தைப்பூசம், கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், காா்த்திகை மகாதீபம் உள்ளிட்ட விழாக்கள் குறிப்பிடத்தக்கவையாகும். அந்த வகையில் நிகழாண்டு நால்வா் விழா சனிக்கிழமை தொடங்கி நடத்தப்பட்டது.
முதலாம் ஆண்டு விழாவில் நால்வா்கள் என்று அழைக்கப்படும், ஆதிசங்கராச்சாரியாா், சம்பந்தா், சுந்தரா், திருநாவுக்கரசா் ஆகியோரை போற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
இதில், ஆதிசங்கராச்சாரியாா், சம்பந்தா், சுந்தரா், திருநாவுக்கரசா் ஆகியோா்களின் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, கேடயத்தில் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. விழாவில் திருப்புகழ் பாடல்கள், கீா்த்தனைகள் பாடி பக்தா்களுக்கு திருவருள் கிடைக்க வேண்டும், நாடு நலம் பெற வேண்டும் என்று பிராா்த்தனை செய்யப்பட்டது. தொடா்ந்து, ஆதரவற்றோா் இல்லங்களில் உணவு வழங்கப்பட்டது.