செய்திகள் :

விருச்சிகம்: `பதற்றம்,டென்ஷன் இருக்கும்; நற்பலன்களும் உண்டு' - ராகு கேது தரும் பலன்கள்

post image

உங்கள் ராசிக்கு, (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 4-ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும் நின்று பலன் தருகிறார்கள். இந்த காலத்தில் சவால்களும் அலைச்சல்களும் இருந்தாலும், எதிர்பாராத சில நற்பலன்களும் ஆதாயமும் மகிழ்ச்சிப்படுத்துவதாக அமையும்.

ராகு பகவான் தரும் பலன்கள்

1. ராகு பகவான் உங்கள் ராசிக்கு 4-வது வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகும் இந்தக் காலக்கட்டத்தில், பிள்ளைகளுடனான கருத்து மோதல்கள் விலகும். சங்கடங்களும் பிரச்னைகளும் விலகத் தொடங்கும்.

2. எதிலும் திடமான முடிவெடுப்பீர்கள். உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகிச்சென்றவர்கள் எல்லாம், இப்போது உங்களைத் தேடி வருவார்கள். எனினும் தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டு குணமாகும்.

3. தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. சிலருக்குக் கடன் பிரச்னை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. தேவையில்லாத செலவுகளைத் தவிருங்கள்.

விருச்சிகம்

4.இழுபறியான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பக்குவமாய்ப் பேசி தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் இனி சந்தோஷம் நிலைக்கும். வீட்டில் தாமதமாகிக் கொண்டிருந்த கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் எல்லாம் நல்ல விதத்தில் முடியும்.

5. வியாபாரத்தில், சாமர்த்தியத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் கஷ்டமான வேலைகளையும் எளிதில் செய்து முடித்து வியக்கவைப்பீர்கள். மேலதிகாரி தொடர்பான விமர்சனங்கள் வேண்டாம். வெளிநாட்டு வேலை அமைய வாய்ப்பு உண்டு.

கேது பகவான் தரும் பலன்கள்

6. இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களைத் தந்த கேது பகவான், இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் எதிலும் ஒரு பதற்றம், டென்ஷன் இருக்கும். காரியங்களை முடிப்பதில் அலைக்கழிப்பு உண்டு.

7.. பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் பெருமை அடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

8. சேமிக்க முடியாதபடி செலவுகளும் தொடரும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வீண் கௌரவத்திற்காகக் கையிருப்பைக் கரைக்காதீர்கள். வேற்று மொழியினர் உதவுவார்கள். வியாபாரத்தில் அவசரப்பட்டுப் பெரிய முதலீடுகளை இறக்காதீர்கள். உத்தியோகச் சூழல் நிம்மதி தரும்.

9. கர்நாடக மாநிலத்தில் உள்ள குக்கே சுப்ரமணியர் கோயிலுக்குச் சென்று வாருங்கள். சங்கரன் கோவில் கோமதி அம்மன் கோயிலுக்குச் சென்றும் வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயங்களுக் குச் சென்று, ராகு-கேதுவுக்கு தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள்; சஞ்சலங்கள் நீங்கும்.

மீனம்: `பணம் வரும் வழி இதுதான்' - ராகு கேது தரும் பலன்கள்

ஏப்ரல் 26 முதல் (வாக்கியப் பஞ்சாங்கப்படி) உங்கள் ராசியிலிருந்து விலகி, 12-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் ராகு பகவான். அதேபோல், கேது பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் நின்று பலன் தரப்போகிறார... மேலும் பார்க்க

கும்பம்: `வழக்குகள் வேண்டாம்; என்ன காத்திருக்கிறது?' - ராகு கேது தரும் பலன்கள்

ஏப்ரல் 26 முதல் (வாக்கியப் பஞ்சாங்கப்படி) உங்கள் ராசியிலேயே அமர்கிறார் ராகு பகவான். கேது பகவான், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் நின்று பலன் தருகிறார். வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கு ... மேலும் பார்க்க

மகரம்: `கவனம்; உடல்நல அக்கறை நிச்சயம் தேவை' - ராகு கேது தரும் பலன்கள்

ஏப்ரல் 26 முதல் (வாக்கிய பஞ்சாங்கப்படி)உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் ராகு பகவான். கேது பகவான், உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் நின்று பலன் தருகிறார். அனுபவ அறிவைத் தருவதாகவும்... மேலும் பார்க்க

தனுசு: ` உதவ வரும் நபர்; தவிர்க்க வேண்டியது எது?' - ராகு கேது தரும் பலன்கள்

உங்கள் ராசிக்கு, (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 3-ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திலும் நின்று பலன் தருகிறார்கள். இந்த காலத்தில், கேது பகவான் சற்று அலைக்கழிப... மேலும் பார்க்க

துலாம்: `திடீர் யோகம், சுபகாரியம்' - ராகு கேது தரும் பலன்கள்

உங்கள் ராசிக்கு, (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 5-ம் இடத்திலும், கேது பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும் நின்று பலன் தருகிறார்கள். இந்த ராகு- கேது பெயர்ச்சிக் காலத்தில், ரா... மேலும் பார்க்க

கன்னி : `நிம்மதி பிறக்கும் - 3 முக்கியப் பலன்கள்' - ராகு கேது தரும் பலன்கள்

உங்கள் ராசிக்கு, (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 6-ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திலும் நின்று பலன் தருகிறார்கள். இந்த ராகு, கேது மாற்றமானது, சகல வகைகளிலும்... மேலும் பார்க்க