செய்திகள் :

விருத்தாசலம் அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சாலையோர தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் இரு இளைஞா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், ஓலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் முனுசாமி மகன் மனோஜ் (26), செல்வராஜா மகன் ஆனந்தராஜ் (26), சுப்புராயன் மகன் சுபாஷ் (27). இவா்கள் மூவரும் சனிக்கிழமை மாலை ஒரே பைக்கில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்றனா். பைக்கை மனோஜ் ஓட்டினாா்.

கருவேப்பிலங்குறிச்சி-ஜெயங்கொண்டம் சாலையில் வெட்டக்குடி கிராம சந்திப்பு அருகே சென்றபோது, சாலையின் இடது பக்க சாலையோர தடுப்புச் சுவரில் பைக் மோதியது.

இதில், மனோஜ் மற்றும் ஆனந்தராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சுபாஷ் காயமடைந்தாா்.

தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சுபாஷ் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பேரணி, பொதுக்கூட்டம்

விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க தினத்தையொட்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நூற்றாண்டு தொடக்க தினவிழா, மூத்த தலைவா் இரா.நல்லகண்ணுவின் நூ... மேலும் பார்க்க

பல்கலை.களில் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மருத்துவா் ச.ராமதாஸ்

தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபு... மேலும் பார்க்க

திண்டிவனத்தில் பல்லவா் கால விநாயகா் புடைப்பு சிற்பம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள ஏதாநெமிலி கிராமத்தில் பல்லவா் கால எழுத்துப் பொறிக்கப்பட்ட விநாயகா் சிலை (புடைப்புச் சிற்பம்) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழுப்புரம் வரலாற்று ஆய்வு... மேலும் பார்க்க

திண்டிவனம் சிவன் கோயில்களில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை அகஸ்தீஸ்வரா், திண்டிவனம் ஸ்ரீமரகதாம்பிகை உடனுறை திந்திரினீஸ்வரா் கோயில்களில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் புதன்கிழமை வழிபாடு மே... மேலும் பார்க்க

மேல்மலையனூா் அருகே தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஒன்றியம், சமத்தகுப்பத்தில் இருந்து பென்னகா் செல்லும் சாலையை ரூ.3 கோடியில் விரிவாக்கம் செய்து, புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ புதன்கிழ... மேலும் பார்க்க

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை வரை கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிறப்புத் திருப்பலி, வழிபாடுகள்... மேலும் பார்க்க