விரைவில் பிரபாஸ் திருமணம்! மணப்பெண் யார்?
நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமண நடைபெற உள்ள தகவல் உறுதியாகியுள்ளது.
பாகுபலி, சலார் படங்களின் பிரம்மாண்ட வெற்றியால் இந்தியளவில் முன்னணி நடிகராக பிரபாஸ் மாறியுள்ளார். இவர் நடித்த கல்கி திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.
தற்போது, ராஜா சாப் என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஃபேண்டசி கலந்து திகில் படமாக இது தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நடிகர் பிரபாஸும் நடிகை அனுஷ்காவும் நீண்ட நாள்களாகக் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்தில் இருப்பதாகத் தகவல் வெளியானது.
இதையும் படிக்க: மத கஜ ராஜா முதல்நாள் வசூல்!
அதேநேரம், பிரபாஸின் சித்தி விரைவில் பிரபாஸுக்கு திருமணம் நிகழவுள்ளது என தெரிவித்திருந்தார். இதனால், ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. தொடர்ந்து, நடிகை அனுஷ்கா மணப்பெண் இல்லை என உறுதியான தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், கேம் சேஞ்ஜர் புரமோஷனுக்காக நடிகர் ராம் சரண், நடிகர் பால கிருஷ்ணாவுடனான நிகழ்ச்சி ஒன்றில், “பிரபாஸ் திருமணம் செய்யவுள்ள தகவல் உண்மைதான். மணப்பெண் ஆந்திரத்தின் மேற்கு கோதாவரி நகருக்கு அருகே உள்ள கானபவரம் என்கிற ஊரைச் சேர்ந்தவர்” எனத் தெரிவித்தார்.
இதனால், பிரபாஸும் அனுஷ்காவும் இணைவார்கள் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.