பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு: 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை
விலை உயர்ந்த வாக்குரிமையைத் திருட அனுமதிப்பதா? பிரியங்கா
வாக்களிப்பதுதான் குடிமக்களின் விலை உயர்ந்த உரிமை, அதனை நாம் திருட அனுமதிப்பதா? என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்தப் பேரணி இன்று (ஆக. 26) 10வது நாளை எட்டியுள்ளது.
பிகாரின் மதுபானி பகுதியில் தொண்டர்கள் மத்தியில் பிரியங்கா காந்தி பேசியதாவது, உங்கள் அனைவரையும் ஒன்றாகப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்குத் தேவையான இடங்களில் ஆதரவு கொடுத்துள்ளீர்கள். அதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி கூறியது நினைவிருக்கிறதா? காங்கிரஸ்காரர்கள் உங்கள் எருமைகளைத் திருடிவிடுவார்கள் எனக் கூறினார். ஆனால், அவர் நமது வாக்குகளைத் திருடுவார் எனத் தெரியாது. ஜனநாயகத்தின் அடித்தளமே குடிமக்கள் செலுத்தும் வாக்குதான்.
இது நமது விலைஉயர்ந்த உரிமை. இதனை திருவதற்கு நாம் அனுமதிப்பதா? அவர்கள் நமது வேலைவாய்ப்பை திருடிவிட்டனர். அனைத்துமட்டங்களிலும் திருட்டு நடந்துள்ளது. நாம் இதனை அனுமதிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டார்.
வாக்குரிமை பேரணியின் 10வது நாளான இன்று ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்