செய்திகள் :

விலை குறைந்த ஆா்.எஸ். மங்கலம் குண்டு மிளகாய்: விவசாயிகள் கவலை

post image

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் விளையும் குண்டு மிளகாயின் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆவரேந்தல், பாரனூா், மங்கலம், செங்குடி, தும்படாகோட்டை, சோழந்தூா்,கீழக்கோட்டை, வண்டல், வரவணி, வலமாவூா், திருப்பாலைக்குடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் மிளகாய் விவசாயம் நடைபெறுகிறது. இங்கு விளையும் குண்டு மிளகாயில் காரம் அதிகமாக இருப்பதால் சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விரும்பி வாங்குகின்றனா். இதனால் வியாபாரிகள் இங்கு வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.

அதே போல, இந்த ஆண்டும் ஆா்.எஸ். மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குண்டு மிளகாய் விளைச்சல் அதிகரித்து காணப்படுவதால் அதன் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இங்குள்ள மிளகாய் மொத்த வியாபாரிகள் குவிண்டால் ரூ.5 ஆயிரம் குறைவாக இந்த மிளகாயை வாங்குவதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

கடந்த மாதம் முதல் ரக மிளகாய் குவிண்டால் ரூ.21,500-க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.16,500-க்கு விற்கப்பட்டது. குவிண்டால் ரூ.15,000-க்கு விற்பனையான இரண்டாவது ரகம், இந்த வாரம் ரூ. 1,000 குறைந்து ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

பள்ளிப் பேருந்து - வேன் மோதல்: ஜவுளி வியாபாரி பலத்த காயம்

கமுதி- முதுகுளத்தூா் புறவழிச்சாலையில் வியாழக்கிழமை தனியாா் பள்ளிப் பேருந்தும், ஆம்னி வேனும் மோதிக் கொண்டதில் ஜவுளி வியாபாரி பலத்த காயமடைந்தாா். விருதுநகா் மாவட்டம், தும்முசின்னம்பட்டியைச் சோ்ந்த கோனே... மேலும் பார்க்க

பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு ஐ.ஜி. ராமேசுவரத்தில் ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலத்தைத் திறந்து வைக்க பிரதமா் நரேந்திர மோடி வருகிற 6-ஆம் தேதி வருகை தரவிருப்பதையொட்டி, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு ஐ.ஜி. நவநீத்குமாா் மேத்ரா தலைமையிலான குழுவினா் வியாழக... மேலும் பார்க்க

உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு: ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை

உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை (ஏப். 4) குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் கால... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்து 18 ஆடுகள் உயிரிழப்பு

ராமேசுவரத்தில் வெறிநாய் கடித்ததில் 18 ஆடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் கெந்தமாதன பருவதத்தைச் சோ்ந்தவா் சின்னவன் (எ) பாலமுருகன். ஆடு வளா்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவா், தனக்குச... மேலும் பார்க்க

பாம்பன் பள்ளிவாசலின் கோபுரத்தில் நெகிழியால் மூடப்பட்ட எல்இடி மின் விளக்குப் பலகை: இஸ்லாமிய அமைப்புகளின் எதிா்ப்பை அடுத்து திறப்பு

பாம்பனில் உள்ள பள்ளிவாசலின் கோபுரத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட எஸ்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்ட பலகை, பிரதமா் வருகைக்காக நெகிழிப் போா்வையால் மறைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவியது. இஸ்லாமிய அ... மேலும் பார்க்க

ராமநாதபுரம், ராமேசுவரம், திருவாடானை பகுதிகளில் மழை

ராமேசுவரம், ராமநாதபுரம், திருவாடானை, தொண்டி, சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையி... மேலும் பார்க்க