செய்திகள் :

விளையாட்டாக கேபிளை இழுத்த சிறுவன்; ட்ரில்லிங் மெஷின் நெற்றியில் துளைத்து பலி - கேரளாவில் சோகம்

post image

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் மேற்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

மூத்த மகன் துருவ் நாத்துக்கு இரண்டரை வயது ஆகிறது. மகேஷ் வெளிநாட்டில் வேலைசெய்துவந்த நிலையில் இரண்டாவது குழந்தைக்கு நூல் கட்டும் நிகழ்வுக்காக ஊருக்கு வந்தார்.

கடந்த 8-ம் தேதி நூல் கட்டும் நிகழ்வு முடிந்த நிலையில் 9-ம் தேதி வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது மகன் துருவ் நாத் இன்னும் சில நாட்கள் வீட்டில் நிற்கும்படி கூறியதை அடுத்து பயணத்தை ரத்து செய்திருந்தார்.

குழந்தை மரணம்

இந்த நிலையில் வீட்டில் சில வேலைகளுக்காக சுவரில் ஓட்டையிட வேண்டியது இருந்ததால் ட்ரில்லிங் மிஷின் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார் மகேஷ்.

அந்த ட்ரில்லிங் மிஷினை பிளாஸ்டிக் கவரில் சுற்றி சமையல் அறை சிலாப்பில் வைத்திருந்தார்.

வீட்டில் உள்ளவர்கள் கவனிக்காத நேரத்தில் கவரில் விளையாட்டுப் பொருள் வைத்திருப்பதாக நினைத்த குழந்தை துருவ் நாத் ட்ரில்லிங் மிஷினின் கேபிளை பிடித்து இழுத்துள்ளான்.

சிலாப்பில் இருந்த ட்ரில்லிங் மிஷின் கீழே விழுந்ததில் துளையிடும் பிட் (ஆணி போன்ற பகுதி) குழந்தையின் நெற்றிப்பகுதியில் துளைத்து மூளைவரை காயம் ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் உடனே அங்கு சென்று பார்த்தனர். படுகாயம் அடைந்த நிலையில் கிடந்த குழந்தையை உடனே மீட்டு எஸ்.பி போர்ட் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அனந்தபுரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

ட்ரில்லிங் மிஷின் துளைத்ததால் இறந்த குழந்தை துருவ் நாத்

கடந்த 9-ம் தேதி காலை 11 மணிக்கு குழந்தைக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தது.

மூளையில் காயம் ஏற்பட்டதால் குழந்தைக்கு மரணம் சம்பவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. குழந்தை இறந்ததும் துக்கம் தாளாமல் தந்தை மகேஷ் மருத்துவமனை கட்டடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார்.

அங்கிருந்த உறவினர்கள் அவரை தடுத்து மீட்டனர். குழந்தையின் உடலுக்கு நேற்று இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

திண்டுக்கல் : சாதி மாறி திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை - பெண்ணின் தந்தை கைது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). பால் கறவை தொழில் செய்து வருகிறார்.கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவ... மேலும் பார்க்க

பள்ளி கழிவறையில் பதுங்கி இருந்து 7 வயது மாணவி பாலியல் வன்கொடுமை - ராஜஸ்தானில் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 7 வயது பள்ளி மாணவி கழிவறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அம்மாணவி கழிவறைக்கு சென்றபோது அங்கு மறைந்திருந்த நபர் மாணவியை பாலியல் வன்... மேலும் பார்க்க

நாமக்கல்: கிட்னி விற்பனையில் ஈடுபட்ட 2 புரோக்கர்கள் கைது; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறி கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோதமாக கிட்னி விற்பனை செய்து வந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வி... மேலும் பார்க்க

சபரிமலை: 417 கிராம் தங்கம் திருட்டு, 10 பேர் மீது வழக்கு - தேவசம் போர்டு தலைவர் சொல்வதென்ன?

சபரிமலை ஐயப்பன் கோவில் துவாரபாலகர் சிலையில் கவசங்கள் மீது தங்கம் பூசுவதாக கூறி, 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அதை எடுத்துச் சென்று மோசடி செய்யப்பட்டதாகவும், 2019 ஆகஸ்ட் மாதம் ஐயப்பன் கோயில் கருவறை வாசலில... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: அரசுப் பேருந்தில் சென்ற பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; நடத்துநர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11 ஆம் தேதி ஒரத்தநாட்டில் உள்ள தனியார... மேலும் பார்க்க

Uttar Pradesh: சிறையில் காசோலை திருட்டு; விசாரணையில் பகீர் தகவல்; அதிகாரி, கைதிகள் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் அசாம்கர் மாவட்ட சிறைக்குச் சொந்தமான வங்கிக்கணக்கில் இருந்து சமீபத்தில் ரூ.2.6 லட்சம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதை சிறை அதிகாரி ஆதித்ய குமார் கண்டுபிட... மேலும் பார்க்க