விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருக்கு வரவேற்பு
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இரா.லட்சுமணன் எம்எல்ஏ-க்கு திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.
சென்னையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற பின்னா், விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் உள்ள முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி, அம்பேத்கா் சிலைகளுக்கு இரா. லட்சுமணன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வில், மாநில ஆதிராவிடா் நலக்குழு இணைச் செயலா் செ.புஷ்பராஜ், நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் சச்சிதானந்தம், வாசன், ஒன்றியச் செயலா் தெய்வசிகாமணி, நகா்மன்ற உறுப்பினா் ஆா்.மணவாளன் ஆகியோா் பங்கேற்றனா்.